ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
Jump to navigation
Jump to search
![]() | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | உப்பல், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா |
ஆள்கூறுகள் | 17°24′23.4″N 78°33′01.6″E / 17.406500°N 78.550444°E |
உருவாக்கம் | 2003 |
இருக்கைகள் | 55,000 |
உரிமையாளர் | ஐதராபாத் துடுப்பாட்ட வாரியம் |
கட்டிடக் கலைஞர் | சசி பிரபு[1] |
இயக்குநர் | ஐதராபாத் துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | இந்தியத் துடுப்பாட்ட அணி ஐதராபாத் துடுப்பாட்ட அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் |
முடிவுகளின் பெயர்கள் | |
ஷிவ் லால் யாதவ் முனை விவிஎஸ் லட்சுமண் முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 12 நவம்பர் 2010:![]() ![]() |
கடைசித் தேர்வு | 12 அக்டோபர் 2018:![]() ![]() |
முதல் ஒநாப | 16 நவம்பர் 2005:![]() ![]() |
கடைசி ஒநாப | 2 மார்ச் 2019:![]() ![]() |
முதல் இ20ப | 13 அக்டோபர் 2017:![]() ![]() |
கடைசி இ20ப | 6 அக்டோபர் 2019:![]() ![]() |
As of 7 டிசம்பர் 2019 Source: ESPN Cricinfo |
ராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் (Rajiv Gandhi International Cricket Stadium) என்பது தெலங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள முதன்மையான துடுப்பாட்ட அரங்கமாகும். இது ஐதராபாத் துடுப்பாட்ட அணிக்கும் சன்ரைசர்சு ஐதராபாத் அணிக்கும் உள்ளக அரங்கமாக விளங்குகிறது. இது ஐதராபாத்தின் கிழக்குப் புறநகர்ப் பகுதியான உப்பலில் அமைந்துள்ளது. 16 ஏக்கர்கள் (65,000 m2) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தில் 55,000 பார்வையாளர்கள் இருக்க இயலும். இதன் இரு முனைகளும் அணிக்கூடார முனை, வடக்கு முனை என அழைக்கப்பட்டு வந்தன. ஐதராபாத்தின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விவிஎஸ் லட்சுமண் ஆடுவதிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னர் ஐதராபாத் துடுப்பாட்டச் சங்கம் வடக்கு முனைக்கு அவர் நினைவாகப் பெயரிட்டுள்ளது.