வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 நவம்பர் 1974 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 209) | 20 நவம்பர் 1996 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சனவரி 2012 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 112) | 9 ஏப்ரல் 1998 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 3 திசம்பர் 2006 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992–2012 | ஐதராபாத்து துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–2009 | லேங்கஷயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | டெக்கான் சார்ஜர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 30 சனவரி 2012 |
வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் (V.V.S.Laksman,ⓘ , பிறப்பு: நவம்பர் 1, 1974) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்ட விவரணையாளராக உள்ளார்.[1] இவர் சில நேரங்களில் வெரி வெரி ஸ்பெசல் (VVS) எனவும் அழைக்கப்படுகிறார்.[1]
இவர் வலது கை மட்டையாளர். பல தேர்வுத் துடுப்பாட்டங்களை வென்று கொடுத்ததாலும், போட்டிகளை தோல்வியிலிருந்து மீட்டதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரின் காலகட்டத்தில் உலகின் தலை சிறந்த அணியாகக் கருதப்பட்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 281 ஓட்டங்கள் அடித்தார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையின் மிகச் சிறப்பான போட்டியாக இது கருதப்படுகிறது.[2]2011 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மசிறீ விருதினைப் பெற்றார்.[3]
துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடாமல் நூறு தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடிய வீரர்களில் லட்சுமனனும் ஒருவர் ஆவார். மெதுவாக ஓடி ஓட்டங்கள் எடுப்பவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் விரைவு வீச்சு மற்றும் களத்தடுப்பு சூட்சுமங்களைத் தகர்த்து ஓட்டங்கள் சேர்ப்பவராக அறியப்படுகிறார்.
இவர் ஐதராபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி, இங்கிலாந்து மாகாண அணியான லேங்கசயர் ஆகிய அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2002 ஆம் ஆண்டின் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்களுள் ஒருவராக அறிவித்தது.[4]
2012 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[5]
வாழ்க்கை
[தொகு]வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் நவம்பர் 1, 1974 இல் ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானாவில் பிறந்தார்.[6][7] லட்சுமணின் தந்தை சாந்தாராம், தாய் சத்யபாமா ஆகிய இருவருமே புகழ்பெற்ற மருத்துவர்கள் ஆவர்.[8] லட்சுமண் ஐதராபாத்தில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். ஆனால் துடுப்பாட்டத்தை தனது வாழ்க்கையாகத் தேர்வு செய்தார்.பெப்ரவரி 4, 2015 இல் புது தில்லியில் உள்ள டெரி பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது.[9][10]
பிப்ரவரி 16, 2004 இல் குண்டூரைச் சேர்ந்த ஜி. ஆர். சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.[8] சைலஜா கணினியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்தத் தம்பதிக்கு சர்வஜித் என்ற மகனும் அசிந்தியா எனும் மகளும் உள்ளனர்.
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]1992-93 ஆம் ஆண்டுகளில் தனது முதல் , முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். பஞ்சாப் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் இவர் ஐதராபாத் மாநில அணிக்காக விளையாடினார். ஆனால் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 17 ஓட்டங்களும் [11] எடுத்தார். அடுத்த தொடரில் ஐதராபாத் அணிக்காக ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு அவர் அனியில் தேர்வாகவில்லை.[12] ஆனால் 1994-95 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துலீப் கோப்பைத் தொடரில் இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தெற்கு அணியில் தேர்வானார். அந்தத் தொடரிலும் இவர் சிறப்பாக செயல்படத் தவறினார். அதன் பிறகான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஐந்து போட்டிகளில் 532 ஓட்டங்கள் எடுத்தார் அதில் இரண்டு நூறுகளும் அடங்கும்[13]. அதில் அவரின் சராசரி 76 ஆக இருந்தது. பின் 1995-96 துலீப் கோப்பையின் முதல் ஆட்டப் பகுதியில் 47 ஓட்டங்களையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 121 ஓட்டங்களும் எடுத்தார். இதில் அணியின் தலைவரான ராகுல் திராவிட்டுடன் இணைந்து 199 ஓட்டங்களை எடுத்தார்.[14] அதற்கு ஆண்டில் நடைபெற்ற ரன்சித் தொடரிலும் 11 ஆட்டப் பகுதியிலும் இவர் 775 ஓட்டங்களை எடுத்தார். அதில் மூன்று நூறுகளும் அடங்கும்.[15] அதில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 203* ஓட்டங்களை எடுத்தார்.[16] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இவர் விளையாடினார்.[17] தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் தொடருக்குத் தேர்வாவதற்கு முன்பாக இவர் 1996-97 ரஞ்சசிக் கோப்பையில் விளையாடி மூன்று ஐம்பது ஓட்டங்களை எடுத்தார்.[18][19]
இந்தியன் பிரீமியர் லீக்
[தொகு]இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவத்தில் இவர் டெக்கான் ஜார்ஜர்ஸ் அணி சார்பாக விளையாடினார். போட்டி துவங்கப்படுவதற்கு முன்பாக இவர் அந்த அணியின் ஐகான் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதனைப் பெற மறுத்ததால் அந்த அணி இவரை $375,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.மேலும் அந்தப் பருவத்தில் அணியின் தலைவராகவு இவரை நிர்ணயம் செய்தது. ஆனால் தொடரின் பாதியிலேயே இவர் அணியில் இருந்து விலகினார்.அதனால் தலைவர் பொறுப்பு அடம் கில்கிறிஸ் இடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த இரண்டு பருவங்களுக்கும் இவரே தலைவராக இருந்தார். ஆறு போட்டிகளில் விளையாடிய லட்சுமணன் 155 ஓட்டங்களை 31 எனும் சரசரியோடு எடுத்தார். அவரின் ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருந்தது. பெரும்பாலும் மூன்றாவ்து வீரராகக் களம் இறங்கினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 44 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரில் அவர் அடித்த ஒரே ஐம்பது ஓட்டம் அது மட்டுமே.
சர்வதேச போட்டிகள்
[தொகு]1996 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். இதன் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.[20] கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 14 மற்றும் 1 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். பின் 1997 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கக் கோரினார்.பின் துவக்க வீரராகக் களமிறங்கி ஆட்டத்தின் முதல் பகுதியில் 64 ஓட்டங்கள் எடுத்தார்.[21] பின் 1998 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் லட்சுமணன் 95 ஓட்டங்களும், சித்து 97 ஓட்டங்களும் எடுத்தனர்.[22]
பன்னாட்டு ஆட்டங்களில் சதங்கள்
[தொகு]தேர்வு ஆட்டங்களில் சதங்கள்
[தொகு]
Symbol | Meaning |
---|---|
* | ஆட்டமிழக்கவில்லை. |
தேர்வு | போட்டித் தொடரில் எத்தனையாவது தேர்வுப்போட்டி. |
Pos. | எத்தனையாவது வீரராகக் களமிறங்கினார் என்பதைக் காட்டுகிறது |
Inn. | ஆட்டப்பகுதி |
H/A | h- இந்தியா- அ- வெளிநாடு |
தோல்வி | போட்டியில் இந்தியா தோல்வி |
வெற்றி | போட்டியில் இந்தியா வெற்றி |
முடிவில்லை | போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது |
இல. | ஓட்டங்கள் | எதிரணி | Pos. | Inn. | தேர்வு | இடம் | H/A | நாள் | முடிவு |
---|---|---|---|---|---|---|---|---|---|
ஒரு | 167 | ![]() |
ஒரு | மூன்று | 3rd | சிட்னி கிரிக்கெட் மைதானம் | வெளிநாடு | 4 சனவரி 2000 |
தோல்வி[23] |
இரண்டு | 281 | ![]() |
மூன்று | மூன்று | 2nd | ஈடன் கார்டன்ஸ் | இந்தியா | 13 மார்ச், 2001 |
வெற்றி[24] |
மூன்று | 130 | ![]() |
ஆறு | ஒரு | 4th | அன்டிகுவா பர்புடா | வெளிநாடு | 11 மே, 2002 |
முடிவில்லை[25] |
நான்கு | 154* | ![]() |
ஆறு | மூன்று | 3rd | ஈடன் கார்டன்ஸ் | இந்தியா | 3 நவம்பர், 2002 |
முடிவில்லை[26] |
ஐந்து | 104* | ![]() |
ஆறு | இரண்டு | 2nd | பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் | இந்தியா | 20அக்டோபர் 2003 |
முடிவில்லை[27] |
ஆறு | 148 | ![]() |
ஆறு | இரண்டு | 2nd | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | வெளிநாடு | 14 டிசம்பர், 2003 |
வெற்றி[28] |
ஏழு | 178 | ![]() |
ஐந்து | ஒரு | 4th | சிட்னி கிரிக்கெட் மைதானம் | வெளிநாடு | 3ஜனவரி , 2004 |
முடிவில்லை[29] |
எட்டு | 140 | ![]() |
நான்கு | இரண்டு | 1st | குயீன்ஸ் துடுப்பாட்ட அரங்கம் | வெளிநாடு | 14 செப்டம்பர், 2005 |
வெற்றி[30] |
ஒன்பது | 104 | ![]() |
மூன்று | ஒரு | 3rd | சர்தார் பட்டேல் அரங்கம் | இந்தியா | 19 டிசம்பர், 2005 |
வெற்றி[31] |
10 | 100 | ![]() |
மூன்று | இரண்டு | 3rd | வார்னர் பார்க் | வெளிநாடு | 25 ஜூன் , 2006 |
முடிவில்லை[32] |
11 | 112* | ![]() |
ஆறு | ஒரு | 2nd | ஈடன் கார்டன்ஸ் | இந்தியா | 1 டிசம்பர் 2006 |
முடிவில்லை[33] |
12 | 109 | ![]() |
மூன்று | இரண்டு | 2nd | சிட்னி கிரிக்கெட் மைதானம் | வெளிநாடு | 3 சனவரி, 2008 |
தோல்வி[34]| |
13 | 200* | ![]() |
ஐந்து | ஒரு | 3rd | பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் | இந்தியா | 30 அக்டோபர் ,2008 |
முடிவில்லை[35] |
14 | 124* | ![]() |
ஐந்து | மூன்று | 2nd | மெக்லியன் பார்க் | வெளிநாடு | 30 மார்ச், 2009 |
முடிவில்லை[36] |
15 | 143* | ![]() |
ஐந்து | இரண்டு | 2nd | ஈடன் கார்டன்ஸ் | இந்தியா | 16 பெப்ரவரி, 2010 |
வெற்றி[37] |
16 | 103* | ![]() |
ஐந்து | நான்கு | 3rd | பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் | வெளிநாடு | 7 ஆகஸ்டு, 2010 |
வெற்றி[38] |
வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்டு அணிகளுக்கு எதிராக நூறு அடித்துள்ளார்.
சான்றுகள்
[தொகு]- கிரிக்இன்ஃபோ Player Profile: V V S Laxman
- Google Video: V V S Laxman's 281 vs Australia பரணிடப்பட்டது 2011-05-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 1.0 1.1 VVS Laxman player profile at Cricinfo
- ↑ [1]
- ↑ VVS Laxman conferred with Padma Shri – Zee News
- ↑ Deccan Chargers squad – IPL 2008
- ↑ "Laxman retires from international cricket". ESPNCricinfo. Retrieved 18 August 2012.
- ↑ "Who is VVS Laxman?". NDTV.com. 2012-08-20. Archived from the original on 2012-11-27. Retrieved 2013-05-07.
- ↑ http://www.sportskeeda.com/cricket/vvs-laxman-the-disaster-management-specialist
- ↑ 8.0 8.1 "Cricket". The Times of India. http://cricket.indiatimes.com/articleshow/498991.cms.
- ↑ http://www.deccanchronicle.com/150204/sports-cricket/article/vvs-laxman-conferred-honorary-doctorate-degree-teri-university
- ↑ http://www.cricketcountry.com/news/vvs-laxman-awarded-honourary-doctorate-244764
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ "Results - South Africa in India Test Series, 1996/97 - ESPNcricinfo.com". Cricinfo. Retrieved 18 April 2019.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 18 April 2019.
- ↑ South Africa in India Test Series – 1st Test at Ahmedabad, 20–23 November 1996
- ↑ Records / India in West Indies Test Series, 1996/97 – India / Batting and bowling averages
- ↑ Border-Gavaskar Trophy 1997/98 – 2nd Test at Calcutta, 18–21 March 1998
- ↑ "Australia vs. India, Sydney Cricket Ground, Sydney, January2–4, 2000". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. Australia, Eden Gardens, Kolkata, March11–15, 2001". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "West Indies vs. India, Antigua Recreation Ground, St John's, May10–14, 2002". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. West Indies, Eden Gardens, Kolkata, October30–November 3, 2002". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. New Zealand, Punjab Cricket Association Stadium, Punjab, October16–20, 2003". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "Australia vs. India, Adelaide Oval, Adelaide, December12–16, 2003". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "Australia vs. India, Sydney Cricket Ground, Sydney, January2–6, 2004". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "Zimbabwe vs. India, Queens Sports Club, Bulawayo, September13–16, 2005". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. Sri Lanka, Sardar Patel Stadium, Ahmedabad, December18–22, 2005". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "West Indies vs. India, Warner Park, St Kitts, June22–26, 2006". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. Pakistan, Eden Gardens, Kolkata, November30–December 4, 2007". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "Australia vs. India, Sydney Cricket Ground, Sydney, January2–6, 2008". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. Australia, Feroz Shah Kotla, Delhi, October29–November 2, 2008". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "New Zealand vs. India, McLean Park, Napier, March26–30, 2009". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "India vs. South Africa, Eden Gardens, Kolkata, February14–18, 2010". Cricinfo. Retrieved August 8, 2010.
- ↑ "Sri Lanka vs. India, Paikiasothy Saravanamuttu Stadium, Colombo, August3–7, 2010". Cricinfo. Retrieved August 8, 2010.