உள்ளடக்கத்துக்குச் செல்

ஷர்துல் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷர்துல் தாகூர்
Shardul Thakur
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷர்துல் நரேந்திர தாக்கூர்
மட்டையாட்ட நடைவலக்கை துடுப்பு
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 218)31 ஆகத்து 2017 எ. இலங்கை
கடைசி ஒநாப16 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்54 (முன்னர் 10)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012மும்பை துடுப்பாட்டக் கழகம்
2015-16கிங்சு இலெவன் பஞ்சாபு
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 10)
2018 - 2021சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 54)
மூலம்: Cricinfo, சூன் 24 2016

ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur, பிறப்பு: அக்டோபர் 16, 1991) இந்தியத் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர் ஆவார். இவர் 218 ஆவது வீரராக இந்திய அணியில் அறிமுகமானார்.மேலும் இவர் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1]பட்டியல் அ துடுப்பாட்டத்திலும் விளையாடியுள்ள இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் கிங்சு இலெவன் பஞ்சாபு , ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

தனது பள்ளிப்பருவ காலத்தில் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய போது 6 பந்துகளில் 6 ஆறுகள் அடித்துள்ளார். நவம்பர்,2012 ஆம் ஆண்டில்இராசத்தான் மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். துவக்ககாலத்தில் சிறப்பாக பந்துவீசவில்லை. முதல் போட்டியில் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனால் இவரின் பந்துவீச்சு சராசரி 82.0 ஆக இருந்தது. 2012- 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய இவர் 27 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் ஒரு போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீசு சராசரி 26.25 ஆக இருந்தது. பின் 2013- 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய இவர் 48 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீசு சராசரி 20.81 ஆக இருந்தது. இதில் ஒரு போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[2]

பின் 2015- 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் சௌராட்டிட மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 8 இலக்குகளைக் கைப்பற்றி 41 ஆவது முறையாக அணி கோப்பை வெல்வதற்கு உதவினார்.[3]

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி நிர்வாகம் இவரை 2 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். இதன் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களைவிட்டுக் கொடுத்து 1 இலக்கை கைப்பற்றினார்.[4] 2017 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணிக்காக விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.[5]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.[6] பின் 2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம்பெற்றிருந்தார்.[7] பின் ஆகஸ்டு 31, 2017 இல் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தான் வீசிய முதல் ஒவரிலேயே டிக்வெல்லாவின் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் 7 ஓவர்களி வீசி 26 ஓட்டஙகளை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். ஓவருக்கு 3.71 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.[8] சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 10ஆம் எண் கொண்ட ஆடையை இவர் அணிந்தார். இது சமூக வலைத் தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஆடையில் உள்ள எண்ணை 54 ஆக மாற்றினார். நவம்பர் 29, 2017 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் சச்சின் டெண்டுல்கர் அணிந்த 10 ஆம் எண் இனிமேல் யாருக்கும் ஒதுக்கப்படாது அதற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என தெரிவித்தது.[9]

சான்றுகள்

[தொகு]
  1. "Shardul Thakur". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
  2. "Mumbai seal 41st Ranji Trophy title with innings win", Cricinfo (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-17
  3. "Feeling of being left out hurts me - Shardul Thakur", Cricinfo (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-17
  4. Shardul Thakur joins Rising Pune Supergiant
  5. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  6. Shardul Thakur earns call-up for WI Tests
  7. "Yuvraj dropped; Ashwin, Jadeja rested for Sri Lanka ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
  8. "4th ODI (D/N), India tour of Sri Lanka at Colombo, Aug 31 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
  9. "Jersey number 10 unofficially retired by the BCCI". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷர்துல்_தாகூர்&oldid=3453539" இலிருந்து மீள்விக்கப்பட்டது