உள்ளடக்கத்துக்குச் செல்

மொயீன் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொயீன் அலி

மொயீன் அலி (Moeen Ali, பிறப்பு: சூன் 18 1987, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.2005-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இடதுகை மட்டையாளரான இவர் இங்கிலாந்து தேசியத் துடுப்பாட்ட அணி தவிர துரந்தோ ராஜ்ஷாஹி,இங்கிலாந்து லயன்ஸ்,இங்கிலாந்து பெர்பார்மன்ஸ் புரோகிராம், 19 வயதிற்கு உடபட்டோருக்கான இங்கிலாந்து அணி, மதமெலெலாந்து டந்ச்கர்ஸ், மீர்ஸ் ஸ்போர்ட்ஸ் சங்கம்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்ரு, வார்விசயர் மற்றும் வோர்செஸ்டர்சயர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.இவருக்கு மோயி எனும் புனைபெயர் உண்டு.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மொயீன் அலி சூன் 18 1987 இல் பிர்மின்ஹாமில் பிறந்தர்[1]. இவர் காஷ்மீரி வம்சாவளியினைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அசாத் காஸ்மீரில் இருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.[2][3] இவரின் பாட்டி பிரிட்டிசு வம்சாவளியினைச் சேர்ந்தவர்.[4]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

முதல்தரத் துடுப்பாட்டம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற எம்சிசி பல்கலைக்கழக துடுப்பாட்டத் தொடரில் இவர் வார்விக்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். நவம்பர் 7, மைசூரில் சார்கண்ட் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் இவருக்குமட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் வார்விக்சயர் அணி 18 ஓட்டங்களில், வெற்றி பெற்றது.[5] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண வாகையாளர் துடுப்பாட்டத் தொடரில் இவர் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். செப்டமபர் 10 , வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட மைதானத்தில் கிளமோர்கன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 37 பந்துகளில்18 ஓட்டங்கள் எடுத்து வான் டெர் கக்டன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 36 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வோர்செஸ்டர்சய 155 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[6]

பட்டியல் அ[தொகு]

2007 ஆம் ஆண்டில் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 22, நார்தம்ப்டன் மைதானத்தில் நார்தம்ப்டன்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் அறிமுகமனார். ஆனால் இந்தப் போட்டி கைவிடப்பட்டது.[7] 2019 ஆம் ஆண்டில் ஐசிசி உலக துடுப்பாட்டத் தொடரில் இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 25, இலார்ட்சு மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் 39பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து பெஹ்ரன்டிராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 64 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூன் 16 இலார்ட்சு துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 98 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் 16 ஓவர்களை வீசி 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் இரு ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரு பந்துகளில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 12 ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் இரு ஓவர்களை மெய்டனாக வீசினார்.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[9]

சான்றுகள்[தொகு]

  1. "Moeen Ali – England Cricket – Cricket Players and Officials – ESPN Cricinfo". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.
  2. "Moeen Ali interview: The England star on backing Alastair Cook, boost in Birmingham and wearing Save Gaza wristbands". Evening Standard. 14 October 2014. https://www.standard.co.uk/sport/cricket/moeen-ali-interview-the-england-star-on-backing-alastair-cook-boos-in-birmingham-and-wearing-save-9793027.html. பார்த்த நாள்: 18 October 2015. 
  3. "Moeen Ali: I want to win Asian hearts". Express. 13 November 2014. http://www.express.co.uk/sport/cricket/534717/Moeen-Ali-I-want-to-win-Asian-hearts. பார்த்த நாள்: 21 March 2015. "Moeen's family have Pakistani heritage in Kashmir..." 
  4. "Moeen Ali reflects on his incredible journey from Birmingham tarmac to the hallowed turf of Lord's" (in en). Telegraph.co.uk. https://www.telegraph.co.uk/sport/cricket/international/england/11140998/Moeen-Ali-reflects-on-his-incredible-journey-from-Birmingham-tarmac-to-the-hallowed-turf-of-Lords.html. 
  5. "Full Scorecard of Cambridge Marylebone Cricket Club University vs Warwickshire 2nd Innings 2005 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  6. "Full Scorecard of Worcestershire vs Glamorgan, County Championship Division Two, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  7. "Full Scorecard of Northamptonshire vs Worcestershire, Twenty20 Cup (England), Midlands/West/Wales Division - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  8. "Full Scorecard of England vs Australia, World Cup, 32nd match - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  9. "Full Scorecard of England vs Sri Lanka 1st Investec Test 2014 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.

இவற்றையும் காண்க[தொகு]

ஜோ ரூட்

வெளி இணைப்பு[தொகு]

மொயீன் அலி கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 25 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொயீன்_அலி&oldid=3448409" இலிருந்து மீள்விக்கப்பட்டது