உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோ ரூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ ரூட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோசப் எட்வர்ட் ரூட்
பிறப்பு30 திசம்பர் 1990 (1990-12-30) (அகவை 33)
டோர், செபீல்டு, தெற்கு யோர்க்சயர், இங்கிலாந்து
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 655)13 டிசம்பர் 2012 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 267)11 சனவரி 2013 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்66
இ20ப அறிமுகம் (தொப்பி 63)22 டிசம்பர் 2012 எ. இந்தியா
இ20ப சட்டை எண்66
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–யோர்க்சயர் கவுண்டி (squad no. 5)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப மத பஅ
ஆட்டங்கள் 94 146 154 185
ஓட்டங்கள் 7,729 5,922 11,817 7,206
மட்டையாட்ட சராசரி 48.30 51.05 48.23 48.68
100கள்/50கள் 17/49 16/33 27/66 17/42
அதியுயர் ஓட்டம் 254 133* 254 133*
வீசிய பந்துகள் 2,660 1,504 4,593 2,091
வீழ்த்தல்கள் 28 24 48 38
பந்துவீச்சு சராசரி 50.07 60.20 50.39 51.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/87 3/52 4/5 3/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
118/– 74/– 157/– 86/–
மூலம்: ESPNcricinfo, 13 ஆகத்து 2020

ஜோசப் எட்வர்டு ரூட் (Joseph Edward Root பிறப்பு: 30 டிசம்பர், 1990) என்பவர் இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரரும் தற்போது தேர்வுத் துடுப்பாட்ட அணியின் தலைவரும் ஆவார். இவர் யோர்க்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வலது கை மட்டையாளர். அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். இவரின் பாங்கு முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கல் வோகன் ஆட்டத் திறனைப் போல் இருப்பதாகக் கூறப்பட்டது. பெரும்பாலும் நடுவரிசை மட்டையாளராகவே விளையாடுகிறார். ஆகஸ்டு 6, 2015 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்ட சிறந்த மட்டையாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.[1] அதில் 917 புள்ளிகள் பெற்றார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் பெற்ற அதிகபட்ச புள்ளி இதுவாகும்.[2]

2012 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். தற்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையின்படி தேர்வுத் துடுப்பாட்டத்தில் மூன்றாவது இடத்திலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 6ஆவது இடத்திலும், பன்னாட்டு இருபது20 போட்டியில் 7ஆவது இடத்திலும் உள்ளார்.

2014 ஆம் ஆண்டில் மார்ட்டின் குரோவ் , ஜோ ரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் சிமித் ஆகியோரை தேர்வுத் துடுப்பாட்டத்தின் யெங் ஃபேப் எனத் தெரிவித்தார்.[3][4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஜோசப் எட்வர்டு ரூட் டிசம்பர் 30, 1990 இல் பிறந்தார். இவரின் தந்தை மேட் ரூட், தாய் ஹெலன். இவர் செபீல்டு அருகில் உள்ள டோர் எனும் ஊரில் வளர்ந்தார்.[5] இவருக்கு பில்லி எனும் இளைய சகோதரர் உள்ளார். இவர் நாட்டிங்ஹம்ஷயர் மாகாண துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். மார்ச் 2016 இல் கேரி காட்டரெல் என்பவரை திருமண உறுதி செய்தார்.[6] இவர்களுக்கு சனவரி 7, 2017 இல் ஆல்ஃபிரெட் வில்லியம் ரூட் எனும் மகன் பிறந்தார்.[7] இவர் செஃபீல்டு யுனைட்டட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.[8]

இந்தியத் தொடர் 2012-2013

[தொகு]

இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இங்கிலாந்து அணி சார்பாக விளையாடும் 655 ஆவது நபர் ஆவார்.[9] இவருக்கான தொப்பியை முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் சகலத் துறையரான போல் கொலிங்வுட் வழங்கினார். அந்தப் போட்டியில் துவக்கவீரராக அல்லாமல் 6 ஆவது வீரராக களம் இறங்கினார். அதில் 229 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்தார்.[9] பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்கள் அடித்து இந்திய மண்ணில் வராலாற்றி வெற்றியைப் பதிவு செய்ய உதவினார். இந்தத் தொடரில் மொத்தம்93 ஓட்டங்கள் எடுத்தார்.[9]

விருதுகள்

[தொகு]

2014,2015, மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் உலக லெவென் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் ரூட் இடம்பிடித்தார்.[10]2014 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை சிறந்த துடுப்பாட்ட வீரராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு உலக லெவன் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்.[11] அதே ஆண்டில் இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதினைப் பெற்றார்.[10] மேலும் ரசிகர்களின் வீரர் விருதினையும் இதே அண்டில் பெற்றார்.[10]

தேர்வு ஆட்டங்கள்

[தொகு]

2014 ஆகத்து 18 இன் படி:

எதிராளி[12] ஆட்டங்கள் இன்னிங்சுகள் ஆட்டமிழக்கமை ஓட்டங்கள் அதிகபட்ச ஓட்டம் 100 50 சராசரி
 ஆத்திரேலியா 9 18 2 531 180 1 2 33.18
 இந்தியா 6 9 3 611 154* 2 4 101.83
 நியூசிலாந்து 5 9 0 331 104 1 1 36.77
 இலங்கை 2 4 1 259 200* 1 0 86.33
மொத்தம் 22 40 6 1,732 200* 5 7 50.94

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்

[தொகு]
இல. ஓட்டங்கள் எதிர் நிலை. இன்னி. தேர்வு அரங்கு H/A நாள் முடிவு
1 104  நியூசிலாந்து 5 1 2/2 எடிங்க்லி அரங்கு, லீட்சு Home 25 மே 2013 வெற்றி[13]
2 180  ஆத்திரேலியா 2 2 2/5 இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் Home 20 சூலை 2013 வெற்றி[14]
3 200*  இலங்கை 5 1 1/2 இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் Home 12 சூன் 2014 சமம்[15]
4 154*  இந்தியா 5 1 1/5 டிரென்ட் பாலம், நொட்டிங்காம் Home 12 சூலை 2014 சமம் [16]
5 149*  இந்தியா 5 1 5/5 ஓவல், சரே Home 17 ஆகத்து 2014 வெற்றி [17]

ஒருநாள் போட்டிகள்

[தொகு]

டிசம்பர் 11 2014 வரை:

எதிராளி[18] ஆட்டங்கள் இன்னிங்சுகள் ஆட்டமிழக்காமை ஓட்டங்கள் style="width:50px;"ளதிக ஓட்டங்கள் 100 50 சராசரி
 ஆத்திரேலியா 8 8 0 108 55 0 1 13.50
 இந்தியா 10 9 1 333 113 1 1 41.62
 நியூசிலாந்து 7 7 2 292 79* 0 2 58.40
 இசுக்காட்லாந்து 1 1 0 17 17 0 0 17.00
 தென்னாப்பிரிக்கா 1 1 0 48 48 0 0 48.00
 இலங்கை 11 10 2 398 104* 1 1 49.75
 மேற்கிந்தியத் தீவுகள் 3 3 0 167 107 1 0 55.66
மொத்தம் 41 39 5 1,363 113 3 5 40.08

ஒருநாள் நூறுகள்

[தொகு]
இல. ஓட்டம் எதிர் நிலை. ஒருநாள் அரங்கு H/A நாள் முடிவு
1 107  மேற்கிந்தியத் தீவுகள் 4 3/3 சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அன்டிகுவா வெளி 5 மார்ச் 2014 வெற்றி[19]
2 113  இந்தியா 4 5/5 எடிங்க்லி அரங்கு, லீட்சு Home 5 செப்டம்பர் 2014 வெற்றி[20]
3 104*  இலங்கை 4 5/7 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி வெளி 11 டிசம்பர் 2014 வெற்றி[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srikant Kannoth Kombra. "Joe Root moves to No 1 spot in test rankings". sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  2. "Reliance ICC Best-Ever Test Championship Rating". Reliance ICC Rankings. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  3. "Virat Kohli, Joe Root, Steven Smith, Kane Williamson 'Fab Four' of Tests: Martin Crowe". The Indian Express.
  4. Crowe, Martin (29 August 2014). "Test cricket's young Fab Four". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  5. Joe Root: Man of Steel - Features | Welcome to Yorkshire Retrieved 2018-03-17.
  6. "England star Joe Root gets engaged to girlfriend of two years Carrie Cotterell". Mirror Online. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  7. "Joe Root posts adorable picture with his son". Cricket Country. 23 February 2017. Archived from the original on 17 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Joe Root: Captaining England will drive me forward as a batsman". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  9. 9.0 9.1 9.2 "English cricket team in India – 4th Test". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 14 December 2012.
  10. 10.0 10.1 10.2 "Joe Root wins England hat-trick of awards but warns 'brutal game' can bite him at any time".
  11. Waters, Chris (2014). "Wisden Cricketers of the Year 2014 - Joe Root". Wisden Cricketers' Almanack. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018 – via ESPNcricinfo.
  12. "Statistics / Statsguru / JE Root / Test matches". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  13. "1st Test: England v New Zealand at Leeds, Mar 24–29, 2013". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 May 2013.
  14. "2nd Test: England v Australia at Lord's, Jul 18–22, 2013". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  15. http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2014/engine/match/667899.html
  16. http://www.espncricinfo.com/england-v-india-2014/engine/match/667711.html
  17. http://www.bbc.co.uk/sport/cricket/scorecard/88641
  18. "Statistics / Statsguru / JE Root / ODI matches". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 May 2014.
  19. "3rd ODI: West Indies v England at Antigua, Mar 5, 2014". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
  20. "5th ODI: England v India at Leeds, Sep 5, 2014". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
  21. "ஒருநாள் நூறுகளின் வெற்றி". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_ரூட்&oldid=4064110" இலிருந்து மீள்விக்கப்பட்டது