பாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Arabic term பாங்கு அல்லது அதான் (அரபு மொழி: أَذَان[ʔaˈðaːn]) (also called in Turkish: Ezan)[1] என்பது இசுலாமியர்களின் தொழுகைக்கான அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் [அரபி:أذان] என்பது அரபிச் சொல்லாகும். பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்படுபவர் முஅத்தின் என்று அழைக்கப்படுகிறார். முன்பு உயரமான இடங்களில், மலைக்குன்றுகளில் பாங்கு சொல்வார்கள். இக்காலங்களில் ஒலிபெருக்கிகளைப் பள்ளிவாசல்களில் பொறுத்தி அழைக்கிறார்கள்.

வரலாறு[தொகு]

முஸ்லிம்கள் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஒன்று கூடி தொழுகைக்கான நேரத்தை முடிவு செய்தனர். முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். ஆலோசனையின் போது சிலர் நெருப்பை மூட்டலாம் என்றும் சிலர் மணி அடிக்கலாம் என்றும் கூறினர். ஆனால் இவையெல்லாம் மறுக்கப்பட்டன. அப்போது உமர் (ரலி) தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றார். உடனே பிலால் (ரலி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்” என்று முகம்மது நபி (ஸல்) கூறினார்.

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்) மற்றும் அதன் பொருள்[தொகு]

தொழுகைக்கான அழைப்பின் பொருள் [2]
எண்ணிக்கை அரபியில்
அல்குரானிய அரபியில்
ஒலிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு
4x ٱللَّٰهُ أَكْبَرُ அல்லாஹு அக்பர் இறைவன் மிகப் பெரியவன்
2x أَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்
2x أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ ٱللَّٰهِ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்
2x حَيَّ عَلَى ٱلصَّلَاةِ
حَيَّ عَلَى ٱلصَّلَوٰةِ
ஹய்ய அலஸ்ஸலாஹ் தொழுகைக்கு விரைந்து வாருங்கள்
2x حَيَّ عَلَى ٱلْفَلَاحِ
حَيَّ عَلَى ٱلْفَلَٰحِ
ஹய்ய அலல்ஃபலாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள்
2x

அதிகாலை தொழுகையில் மாத்திரம்

ٱلصَّلَاةُ خَيْرٌ مِنَ ٱلنَّوْمِ
ٱلصَّلَوٰةُ خَيْرٌ مِنَ ٱلنَّوْمِ
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் தூக்கத்தை விடத் தொழுகை மேலானது
2x ٱللَّٰهُ أَكْبَرُ அல்லாஹு அக்பர் இறைவன் மிகப் பெரியவன்
1x لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ லா இலாஹ இல்லல்லாஹு இறைவன் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை

பாங்கிற்கு மறுமொழி கூறுதல்[தொகு]

பாங்கு சொல்லும் போது அதனைக் கேட்பவர் அப்படியே திருப்பி மெதுவாக சொல்லுவார். ஹய்ய அலஸ்ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ் என்று சொல்லும் போது 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்லவேண்டும். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரங்கள் : முஸ்லிம், அபூதாவுத்

பாங்கிற்குப் பிறகு சலவாத்து மற்றும் துஆ செய்தல்[தொகு]

'அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்'

பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக![3]

பார்வைகள்[தொகு]

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு சுன்னி முஸ்லிம்கள் இரண்டு முறை பாங்கு சொல்கின்றனர். முதல் பாங்கு பள்ளிக்கு அழைப்பதற்காகவும், இமாம் குத்பா ஓதுவதற்கு முன்பு இரண்டாவது பாங்கும் சொல்கின்றனர். இம்முறை கலிபா உதுமானால் கொண்டு வரப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கு&oldid=3833541" இருந்து மீள்விக்கப்பட்டது