உள்ளடக்கத்துக்குச் செல்

திருமண உறுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமணம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்வு திருமண உறுதி, நிச்சய தாம்பூலம் அல்லது நிச்சயதார்த்தம் (Engagement) என அழைக்கப்படுகின்றது.

வெகு விமரிசையாகத் திருமணத்தினைக் கொண்டாடும் குடும்பங்களில் நிச்சயப் பத்திரிகை அடிக்கப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. பின் நிச்சய நாளும் திருமணம் போல கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் மணமகனின் பெற்றோர், அவர்களின் வசிப்பிடம் போன்றவையும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் குடும்பத்தில் ஆண் வீட்டாரிலும், பெண் வீட்டாரிலும் முக்கிய உறுப்பினர்கள் மூலம் கையொப்பம் இடப்பட்டு இரு வீட்டாருக்கும் தனி தனியே அளிக்கப்படும் இதன் மூலம் அனைவரின் முன்னிலையிலும் ஒப்புதல் அளிக்கப்படும்

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_உறுதி&oldid=3370919" இலிருந்து மீள்விக்கப்பட்டது