புறத்திருப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓர் புறத்திருப்ப அல்லது புறச்சுழல் பந்துவீச்சு.

புறத்திருப்பம் (Off break) துடுப்பாட்டத்தில் கையாளப்படும் பந்து வீச்சுகளில் ஓர் வகையாகும். இது ஓர் புறச்சுழல் பந்துவீச்சாளரின் தாக்கும் வீச்சாகும்.

துடுப்பாட்டப் பந்தின் தையல்கோட்டின் மீது அனைத்து விரல்களும் இருக்குமாறு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வீசுகையில் புறத்திருப்பம் நிகழ்கிறது. பந்தை வீசும்போது ஓர் வலதுகை வீச்சாளரின் விரல்கள் தையல்கோட்டின் வலதுபுறமாக சுழற்றும்போது வலப்புறச் சுழல் கொடுக்கப்படுகிறது. பந்து துடுப்பாட்டக் களம்|களத்தில் பட்டெழும்பும்போது இந்தச் சுழல் பந்தை நேர்கோட்டிலிருந்து, வீச்சாளரின் பார்வையில், வலதுபுறம் விலகச்செய்கிறது. ஓர் மட்டையாளரின் பார்வையில் பந்து ஓர் வலக்கை ஆட்டக்காரரின் இடப்புறமாக கால்களை நோக்கி திரும்புகிறது.

ஓர் வலக்கை மட்டையாளரின் வலதுபுற களம் "புறப்பரப்பு" என்றும் இடதுபுற களம் "கழல் பரப்பு" எனவும் அறியப்படும். பந்து புறப்பரப்பிலிருந்து திரும்பிச் செல்வதால் இது புறத்திருப்பம் எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறத்திருப்பம்&oldid=1683347" இருந்து மீள்விக்கப்பட்டது