விராட் கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விராட் கோஹ்லி
VIRAT KOHLI JAN 2015 (cropped).jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் விராட் கோலி
பட்டப்பெயர் run machin
பிறப்பு 5 நவம்பர் 1988 (1988-11-05) (அகவை 29)
புது தில்லி, இந்தியா
உயரம் 1.75 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
முதற்தேர்வு 18 ஆகத்து, 2008: எ [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]]
கடைசித் தேர்வு , 2014: எ [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]]
முதல் ஒருநாள் போட்டி 23 நவம்பர், 2006: எ [[தமிழ் நாடு துடுப்பாட்ட அணி|தமிழ் நாடு]]
கடைசி ஒருநாள் போட்டி 28 பெப்ரவரி, 2015:  எ [[மும்பை UAE துடுப்பாட்ட அணி|மும்பை UAE]]
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006-நடப்பில் புது தில்லி துடுப்பாட்ட அணி
2008-present பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
தரவுகள்
தே ஒ.ப.து கள் T20I முதல் தரம்
ஆட்டங்கள் 54 153 28 64
ஓட்டங்கள் 4451 6,418 972 4,735
துடுப்பாட்ட சராசரி 46.30 52.17 46.28 50.37
100கள்/50கள் 10/10 22/33 0/9 17/18
அதிகூடியது 169 183 78* 197
பந்துவீச்சுகள் 144 561 136 612
விக்கெட்டுகள் 0 4 3 3
பந்துவீச்சு சராசரி 145.50 61.00 108.00
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a 0 0
சிறந்த பந்துவீச்சு n/a 1/15 1/13 1/19
பிடிகள்/ஸ்டம்புகள் 30/– 71/– 13/-– 58/–

28 பெப்ரவரி, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்கிரிக்இன்ஃபோவில் இருந்து [http://www.cricinfo.com/india/content/player/253802.html விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: விராட் கோலி]

விராட் கோலி (ஆங்கிலம்:Virat Kohli, இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciationபிறப்பு நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். தற்போது இந்தியத் துடுப்பாட்ட அணியின் அணித் தலைவராக உள்ளார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார். சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்[1]

புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார். மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார். அதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் தனது பத்தொன்பதாவது வயதில் முதல் போட்டியான இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைக்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் மட்டையாளருக்கான தரவரிசையில் 2013 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்தார்.[2] 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான பதுஅ உலக இருபது20 போட்டியின் தொடர்நாயகன் விருது பெற்றார்.

2014 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவரிசையின் படி பன்னாட்டு இருபது20 மட்டையாளர்களின் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். 2017 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர்கள் வரிசையில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். [3]

2012 ஆம் ஆண்டில் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான உதவித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் 2014 ஆம் ஆண்டில் மகேந்திரசிங் தோனி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதன் தலைவர் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது. இலக்குகளைத் துரத்தும் போது அதிக நூறு அடித்தவர்கள் பட்டியலில் இவருக்கு இரண்டாமிடம் கிடைத்தது. இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக விரைவாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்5000 ஓட்டங்கள் எடுத்தவர், விரைவாக நூறு ஓட்டங்களை பத்து முறை எடுத்தவர் ஆகியன ஆகும். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1000 ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது வீரரானார். இது மட்டுமல்லாது பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்றவர், ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் மற்றும் ஐம்பது ஓட்டங்கள் அதிக முறை பெற்றவர் எனும் சாதனைகளைப் படைத்தார்.[4] ஒரு நாள் தரவரிசையில் (மட்டையாளர்களுக்கானது) 909 புள்ளிகள் பெற்றார்.[5] இந்திய வீரர் பெறும் அதிகபட்ச புள்ளி இதுவாகும். மேலும் இருபது 20களில் 897 புள்ளிகளும்,[6] தேர்வுத் துடுப்பாட்டங்களில் 912 புள்ளிகளும் பெற்றார்.

ஆடுவரிசையில் நடுவில் களமிறங்கும் கோலி சில நேரங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார். "கவர்" பகுதியில் சிறப்பாக ஆடுவதற்காக பெயர் பெற்றவர். இவர் வலது கை மிதவேக பந்து வீச்சாளரும் ஆவார்.[7]

பிறப்பு[தொகு]

விராட் கோலி நவம்பர் 5, 1988 இல் புது தில்லியில் பிறந்தார். இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். [8]இவரின் தந்தை பிரேம் கோலி குற்றவியல் வழக்கறிஞர், தாய் சரோஜ் கோலி குடும்பத் தலைவி ஆவார்.[9] இவருக்கு விகாஷ் எனும் மூத்த சகோதரரும், பாவ்னா [10]எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். கோலிக்கு மூன்று வயதாக இருக்கும் போது மட்டையை எடுத்துக் கொண்டு தனது தந்தையை பந்து வீசச் சொல்வார் என இவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். [11]


ஒ. ப. து நூறுகள்[தொகு]

ஒ.ப.து ஆட்டங்களில் விராட் கோலி எடுத்த சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்ட எண் எதிர் நகரம்/நாடு நிகழிடம் ஆண்டு
1 107 14 Flag of Sri Lanka.svg இலங்கை கொல்கத்தா, இந்தியா ஈடன் கார்டன்ஸ் 2009
2 102* 19 Flag of Bangladesh.svg வங்காளதேசம் தாக்கா, வங்காளதேசம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் 2010
3 118 35 Flag of New Zealand.svg நியூசிலாந்து விசாகப்பட்டினம், இந்தியா ஏசிஏ-விடிசிஏ அரங்கம் 2010
4 105 36 Flag of New Zealand.svg நியூசிலாந்து குவஃகாட்டி, இந்தியா நேரு அரங்கம் 2010

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயற்திறன்[தொகு]

நாள் எதிரணி எடுத்த ஓட்டங்கள் ஆடிய பந்துகள் நான்குகள் ஆறுகள் கூடுதல் விவரம் சான்று
15 பிப்ரவரி 2015 பாக்கிஸ்தான் 107 126 8 - உலகக்கிண்ணப் போட்டிகளில் பாக்கிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார் [12].

மேற்கோள்கள்[தொகு]

 1. * "ICC World Twenty20: Virat Kohli best batsman in the world, says Sunil Gavaskar". India Today. மூல முகவரியிலிருந்து 11 July 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 July 2016.
 2. "Kohli and Ajmal top ODI rankings". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 24 September 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 May 2015.
 3. "ICC player rankings".
 4. "Stats Highlights, India vs SL, 5th ODI". bcci.tv. மூல முகவரியிலிருந்து 28 May 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 May 2015.
 5. http://www.relianceiccrankings.com/odi/alltime.php
 6. http://www.relianceiccrankings.com/ranking/t20/batting/
 7. "Virat Kohli profile". பார்த்த நாள் 2008-04-16.
 8. "Even today the money cricketers make is not enough: Kapil Dev in conversation with Virat Kohli". India Today. மூல முகவரியிலிருந்து 11 July 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 October 2015.
 9. "Virat changed after his dad's death: Mother". Times of India. மூல முகவரியிலிருந்து 27 February 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 April 2015.
 10. Lokendra Pratap Sahi (7 March 2011), "Being aggressive comes naturally: Virat Kohli – Young turk speaks about his likes and Dislikes", The Telegraph (Calcutta, India), archived from the original on 23 March 2012, https://web.archive.org/web/20120323135819/http://www.telegraphindia.com/1110307/jsp/sports/story_13677586.jsp, பார்த்த நாள்: 13 March 2012 
 11. "This is Virat". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 9 June 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 June 2015.
 12. "Statistical highlights of India-Pak WC match". தி இந்து (15 பிப்ரவரி 2015). பார்த்த நாள் 16 பிப்ரவரி 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விராட்_கோலி&oldid=2517064" இருந்து மீள்விக்கப்பட்டது