சுடீபன் பிளெமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுடீபன் பிளெமிங்
Stephen Fleming
Stephen Fleming ONZM (cropped).jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுடீபன் பால் பிளெமிங்
பிறப்பு1 ஏப்ரல் 1973 (1973-04-01) (அகவை 50)
கிறைஸ்ட்சேர்ச், நியூசிலாந்து
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குதலைவர், மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 188)19 மார்ச் 1994 எ இந்தியா
கடைசித் தேர்வு22 மார்ச் 2007 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 88)25 மார்ச் 1994 எ இந்தியா
கடைசி ஒநாப24 ஏப்ரல் 2007 எ இலங்கை
ஒநாப சட்டை எண்7
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா. மு.த. பட். அ
ஆட்டங்கள் 111 280 247 461
ஓட்டங்கள் 7,172 8,037 16,409 14,037
மட்டையாட்ட சராசரி 40.06 32.40 43.87 35.09
100கள்/50கள் 9/46 8/49 35/93 22/86
அதியுயர் ஓட்டம் 274* 134* 274* 139*
வீசிய பந்துகள் 29 102 35
வீழ்த்தல்கள் 1 0 2
பந்துவீச்சு சராசரி 28.00 15.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/8 0/0 1/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
171/– 133/– 340/– 226/–
மூலம்: துடுப்பாட்ட காப்பகம், 20 செப்டம்பர் 2008

சுடீபன் பிளெமிங் (Stephen Fleming, , பிறப்பு: ஏப்ரல் 1, 1973) ஒரு முன்னாள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

டேனியல் வெட்டோரிக்கு அடுத்தபடியாக அதிக போட்டிக்கு தலைமை தாங்கியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மேலும் வெற்றிகரமான தலைவராகவும் இருந்துள்ளார். இந்தியத் துடுப்பாட்ட அணி, இங்கிலாந்து துடுப்பாட்ட அணி, மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை இவரின் தலைமையிலான அணி வென்றுள்ளது[1][2]

மேலும் இவரின் தலமையிலான அணி 2000 ஐசிசி நாக்அவுட் கோப்பையினை வென்றது. இவரின் அணியில் ஜாகிர் கான், யுவராஜ் சிங் மற்றும் மர்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் இந்த அணிக்காக விளையாடினர்[3]. மேலும்முதல் பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்தார். இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது.[4]

இவர் மார்ச் 26,2008 இல் சர்வதேச துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றார். 2008 இந்தியன் பிரீமியர் லீக் போடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். பின் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் 350,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது.[5]பெப்ரவரி, 2005 இல் பிக்பாஷ் லீக் போட்டிக்காக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார்.[6] சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது.[7] பின் தடைக்குப் பிறகு மீண்டும் 2018 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது.

சரவதேச போட்டிகள்[தொகு]

இடதுகை மட்டையாளரான இவர் 1994 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் 92 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்ற சிலரில் ஒருவரானார். 1995 ஆம் ஆண்டில் தனது சகநாட்டு வீரர்களான மேத்யூ ஹர்ட், தியோன் நாஷ் மற்றும் மரிஜுனா ஆகியோருடன் தான் தங்கியிருந்த தங்கும் விடுதியில் புகைத்தலில் ஈடுபட்டதால் சர்ச்சைக்கு ஆளானார்.[8] 1996-1997 இல் ஓக்லாந்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல்முறையாக நூறு (துடுப்பாட்டம்) அடித்தார். இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் லீ கெர்மனிடருந்து தலைமைப் பொறுப்பைப் பெற்றார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் நியூசிலாந்து துடுப்பாட்ட தலைவர் ஆனவர் எனும் சாதனையினைப் படைத்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2008 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் 196 ஓட்டங்கள் எடுத்தார். அதிகபட்ச ஓட்டம் 45 ஆகும். பின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் 350,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது. 2010 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் 2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Top 10 Most Successful Cricket Captains of All Time". 27 December 2013. Archived from the original on 11 ஏப்ரல் 2017. https://web.archive.org/web/20170411015236/http://sporteology.com/top-10-successful-cricket-captains-time/. 
  2. "Fleming to end New Zealand career". BBC Sport. 14 February 2008. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/new_zealand/7244189.stm. பார்த்த நாள்: 13 November 2011. 
  3. "Magnificent Cairns steers New Zealand to great triumph". ESPNcricinfo. 11 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Ponting leads as Kasprowicz follows". ESPNcricinfo. 11 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. Article regarding New Zealand Cricketers in the IPL auction கிரிக்இன்ஃபோ, retrieved 25 March 2008
  6. "Stephen Fleming named Melbourne Stars coach". 3 News. 25 February 2015. 2 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Stephen Fleming appointed as head coach of CSK in 2018 IPL". deccan chronicle. 19 January 2018.
  8. "Fleming caught out for a smoke". The New Zealand Herald. 6 November 2004. http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=3607554. பார்த்த நாள்: 2010-06-25. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடீபன்_பிளெமிங்&oldid=3554961" இருந்து மீள்விக்கப்பட்டது