முசுத்தாபிசூர் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசுத்தாபிசூர் ரகுமான்
Mustafizur Rahman
মুস্তাফিজুর রহমান
2018 இல் ரகுமான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முசுத்தாபிசூர் ரகுமான்
பிறப்பு6 செப்டம்பர் 1995 (1995-09-06) (அகவை 28)
சத்கீரா, குல்னா, வங்காளதேசம்
உயரம்1.82 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்21 சூலை 2015 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு31 சனவரி 2018 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 118)18 சூன் 2015 எ. இந்தியா
கடைசி ஒநாப28 செப்டம்பர் 2018 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்90
இ20ப அறிமுகம் (தொப்பி 44)24 ஏப்ரல் 2015 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப5 ஆகத்து 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–இன்றுகுல்னா
2016–இன்றுமுகமெதான் விளையாட்டுக் கழகம்
2015–2016டாக்கா டைனமைட்சு
2016–இன்றுலாகூர் காலண்டர்சு
2016–2017சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2016சசெக்சு
2017–இன்றுராஜ்சாகி கிங்க்சு
2018–இன்றுமும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப மு.த
ஆட்டங்கள் 4 34 19 19
ஓட்டங்கள் 7 35 11 38
மட்டையாட்ட சராசரி 1.75 5.33 2.00 3.80
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 4 18* 6 14
வீசிய பந்துகள் 604 893 420 2718
வீழ்த்தல்கள் 12 64 32 56
பந்துவீச்சு சராசரி 23.16 16.00 14.92 20.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 - - 0
சிறந்த பந்துவீச்சு 4/37 6/43 5/22 5/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 3/– 3/– 4/-
மூலம்: கிரிக்கின்ஃபோ, செப்டம்பர் 28 2018

முசுத்தாபிசூர் ரகுமான் (Mustafizur Rahman, பிறப்பு: 6 செப்டம்பர் 1995) வங்காளதேச பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவுப் பந்து வீசாளராக அடையாளம் காணப்படுகிறார். இவர் தான் விளையாடிய முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் தொடர்ப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் (13) கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். முதலாவது தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் "சிறந்த ஆட்டக்காரர்" என்ற விருதையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ரகுமான் 2015 ஏப்ரலில் பாக்கித்தான் அணிக்கு எதிராக இ20 போட்டியில் முதன் முதலில் பன்னாட்டுப் போட்டியாளராக அறிமுகமானார்.[1] அதே ஆண்டில் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இந்தியாவுக்கு எதிராகவும்,[2][3] தேர்வுப் போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடினார்.[4]

பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னர், ரகுமான் 19-அகவைக்குட்பட்டோருக்கான 2014 உலக்க்கிண்ணப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்..[5]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]