பேச்சு:சென்னை சூப்பர் கிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணியின் நிறங்கள் என்பதில் உள்ள வார்த்தைகள் தேவையா? ஆங்கில பதிப்பில் உள்ளது போன்று இருந்தால் பார்ப்பதற்க்கும் நன்றாக இருக்குமே?

படிமம் இணைத்துள்ளேன். இப்போது சரியா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:41, 28 நவம்பர் 2013 (UTC)
நன்றி. ஆங்கிலத்தில் "Honours" என்று இருந்ததை "முடிவுகள்" என்று தமிழாக்கம் செய்துள்ளேன். மேலும் அதில் உள்ள அட்டவணையையும் வெட்டி ஒட்டி உள்ளேன். செய்துள்ள தவறுகளை தெளிவுபடுத்தவும். --Fireishere (பேச்சு) 08:29, 28 நவம்பர் 2013 (UTC)

வெட்டி ஒட்ட உதவி தேவை[தொகு]

தற்போதைய அணி வீரர்கள் மற்றும் வீரர்கள் சம்பளம் ஆகியவை ஆங்கில பதிப்பில் நன்றாக உள்ளது. அவற்றை வெட்டி ஒட்டலாமா? அவ்வாறு செய்யும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் மாற்றம் செய்ய வேண்டியவை என்ன? --Fireishere (பேச்சு) 08:33, 28 நவம்பர் 2013 (UTC)

ஆங்கிலத்தில் உள்ளது விக்கி அட்டவணை மட்டுமே. தாராளமாக வெட்டி ஒட்டுங்கள். வீரர்களுக்கான தமிழ்க் கட்டுரைகளுக்கு இணைப்புகளைக் கொடுங்கள். இணைப்புக் கொடுப்பதற்கு கருவி ஒன்றுள்ளது. அதனைப் பாவித்து இணைப்புக் கொடுக்கலாம். அக்கருவியை உங்கள் பயனர் விருப்புகளில் இணைப்பது மிகவும் நல்லது. ஒரு சில செக்கன்களில் கட்டுரைகளுக்கான இணைப்பைக் கொடுத்து விடும். தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.--Kanags \உரையாடுக 08:45, 28 நவம்பர் 2013 (UTC)