விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



இத்திட்டம் சென்னை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.சென்னை துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சென்னை துறையை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் சென்னை தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

நோக்கம்[தொகு]

நமது விக்கித்திட்டம் சென்னையின் குறிக்கோள்:

  • சென்னை தொடர்பான கட்டுரைகளின் உருவாக்கி தொகுத்து அளவினையும் தரத்தினையும் அதிகரித்தல்.
  • கட்டுரைகளை எளிய தேடலின் பொழுதே ஆர்வமுள்ளோருக்கு கிடைக்க வழிவகை செய்தல்.
  • வலைவாசல்:சென்னை பராமரிப்பு.


சமீபத்தில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்[தொகு]

சென்னை தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.


வார்ப்புருக்கள்[தொகு]

  • பயனர் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புருக்கள் மற்றும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய சென்னை வார்ப்புருக்கள் குறித்து இங்கு காணலாம்.


துணைத்துறைகள்[தொகு]

சிறப்பு உள்ளடக்கங்கள்[தொகு]

வலைவாசல்கள்
கட்டுரைகள்
படங்கள்

இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் சென்னை தொடர்புடைய 2 படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புகள்


திட்ட உறுப்பினர்கள்[தொகு]

உருவாக்குனர்
பங்குபற்றுவோர்

(இணையும் ஒழுங்கில் பெயர்களை இடவும்)

பணிகள்[தொகு]

சென்னைக்கான இந்த விக்கித் திட்டம் புதியது என்பதை மனதில் கொண்டு முதலில் இத்திட்டத்தை சீராக்க வேண்டும்.

  • சென்னை தொடர்பான கட்டுரைகளை கண்காணிக்க வேண்டும்.
  • அவற்றின் வளர்ச்சியில் பெரிதும் பங்களிக்க வேண்டும்.
  • விக்கிப்பீடிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சீரமைக்கப்பட வேண்டிய ஒவ்வொரு கட்டுரையையும் சீரமைக்க வேண்டும்.

பங்காற்றும் வழிகள்[தொகு]

  • சென்னை பற்றிய கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
  • சென்னை தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.

இன்றே உங்கள் சென்னைத் துறைக் கட்டுரையைத் தொடங்குங்கள்!'


இலக்குகள்[தொகு]

உடன் செய்ய வேண்டியவை[தொகு]

  1. தேவையான கட்டுரைகளை அடையாளங்கண்டு வேண்டிய கட்டுரைகள் என்பதில் இணைக்க வேண்டும். பின் அதிலுள்ள கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்க வேண்டும். எதுவும் இன்றி இருப்பதற்கு குறுங்கட்டுரையாக இருப்பது மேல் அல்லவா!.
  2. விக்கித்திட்டம் சென்னையின் கீழுள்ள கட்டுரைகளை சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.

முதல் இலக்கு[தொகு]

  • சென்னை மாவட்டம் கட்டுரையை செம்மைப்படுத்த வேண்டும்.
  • சென்னை சம்பந்தப்பட்ட குறுங்கட்டுரைகளை குறைந்தது 2500 பைட்டுக்களையாவது தாண்டவைத்தல்.

இரண்டாம் இலக்கு[தொகு]

  • பல கட்டுரைகளை முதற்பக்கத்தில் இடம்பெறவும் சிறப்புக்கட்டுரைகளாக ஆக்கவும் முன்நின்று முயற்சித்தல்
  • சென்னையோடு சம்பந்தப்பட்ட துணை வலைவாசல்களை உருவாக்கல்.

பெரும் இலக்கு[தொகு]

விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று பிற விக்கிமீடியத் திட்டங்களிலும் சென்னைத் துறையை மேம்படுத்தல்.

நிறைவுற்றவை[தொகு]

  1. வலைவாசல்:சென்னை - விக்கிப்பீடியா முதற்பக்கம் போல சென்னைக்கான ஓர் பக்கம்