பயனர் பேச்சு:Iramuthusamy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செய்தியினைத் தருவதற்கு இங்கு சொடுக்கவும்.ஞாயிறு
18
ஏப்ரல்

Refresh Time

வாருங்கள்!

வாருங்கள், Iramuthusamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சஞ்சீவி சிவகுமார் 15:23, 13 திசம்பர் 2011 (UTC)

பயனர் :Iramuthusamy பதில்

தொகுப்பு

தொகுப்புகள்


1


நன்றி[தொகு]

போர் ஊர்தி, ஆவடி என்னும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் குறிப்பைப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது நீங்கள் ஆவடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று. நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்து ஆக்கம் செய்வது கண்டு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அருள்கூர்ந்து இயலும் பொழுதெல்லாம் நல்லாக்கம் செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் பெற்ற நல்லறிவும் நல்ல பட்டறிவும், தமிழ் மக்களுக்குச் சென்று பரவுமாறு ஆக்கங்கள் செய்ய வேண்டுகிறேன். உங்கள் நண்பர்கள் சிலரையும் ஊக்குவித்து, நற்பணியாற்ற வழிகாட்டுங்கள். ஆவடியில் என் கல்லூரி நண்பர்கள்/தோழர்கள் செயக்குமார், இராசேந்திரன் ஆகியோர் பணி புரிந்தனர் (இராசேந்திரன் பின்னர் அப்துல் கலாமுடனும், பின்னர் சிதம்பரத்துடனும் பணி புரிந்தார். இராசேந்திரனை இரண்டாடுகளுக்கு முன்பு தில்லியில் சந்தித்தேன். ஒப்பரிய உயர்மணியான மாந்தன் இராசேந்திரன்!). உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. --செல்வா (பேச்சு) 16:52, 15 மார்ச் 2012 (UTC) செல்வா பேச்சு

நான் ஒரு நூலகன். சி.வி.ஆர்.டி.இ நூலகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன். திரு.பி.இராசேந்திரன் அவர்கள் 70 மற்றும் 80 களில் சி.வி.ஆர்.டி.இ இல் பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிறைய கட்டுரைகள் செர்மானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க விரும்பினார். DESIDOC , தில்லியிலிருந்து உடனுக்குடன் உதவி கிடைத்தது. அவருடன் இணைந்து ஒன்றிரண்டு State of the Art Reports செய்தோம். ஒப்பற்ற மனிதர். திரு செயக்குமார் அவர்கள் இணை இயக்குனாரகப் பணியாற்றி அண்மையில் ஒய்வு பெற்றுள்ளார். இவரிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தங்கள் எனக்களித்த ஊக்கமும் உற்சாகமும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. என்னால் இயன்றவரை விக்கிபீடியாவில் பங்களிக்க எண்ணியுள்ளேன். மிக்க நன்றியுடன் --Iramuthusamy (பேச்சு) 17:22, 15 மார்ச் 2012 (UTC)

மிக்க நன்றி![தொகு]

Nandri (நன்றி).png நன்றி
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! Anton (பேச்சு) 05:56, 31 மார்ச் 2012 (UTC)


பயனர் பேச்சு:மதனாஹரன்[தொகு]

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Iramuthusamy. உங்களுக்கான புதிய தகவல்கள் மதனாஹரன் இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
--மதனாஹரன் (பேச்சு) 11:54, 5 ஏப்ரல் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இரா. முத்துசாமி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 18:38, 15 மே 2012 (UTC)

முதற்பக்க கட்டுரைத் திட்டம்[தொகு]


முதற்பக்க அறிமுகம் சிறு குறிப்பு[தொகு]

திரு.இரவி அவர்களுக்கு வணக்கம். என்னைப்பற்றிய அறிமுகம் தருவது பற்றிய தகவலை இன்று தான் படிக்க நேர்ந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னைப்பற்றிய சிறு குறிப்பினை இணைத்துள்ளேன். புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் அன்பிற்கு நன்றி.

இரா.முத்துசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் எனும் ஊரைச் சேர்ந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் நூலக அறிவியல் பட்ட மேற்படிப்பு பட்டமும், ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (டி.ஆர்.டி.சி) (Documentation Research and Training Centre (DRTC), இந்திய புள்ளியியல் நிறுவனம் (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute), பெங்களூர்]] இல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை (சி.வி.ஆர்.டி.இ,) டி.ஆர்.டி.ஒ, என்ற ஆய்வுக்கூடத்தில் தகவல் அறிவியல் அலுவலராகப் (நூலகராகப்) பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். 2011 திசம்பர் முதல் தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வருகிறார். அழகியல், இணையம், இந்து சமயம், இந்துக் கடவுள்கள், உணவுகள், கலைகள், சட்டம், தமிழ் இலக்கியம், தமிழ், தமிழர் அறிவியல், தமிழர் தொழில்நுட்பம், தமிழர், நாட்டுப்புறவியல் மற்றும் மருத்துவம். போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். விக்கிமீடியா காமன்சிலும் பல புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். தமிழ் விக்சனரியிலும் குறிப்பிடும்படி பங்களித்து வருகிறார்.

Muthusamy.jpg படிமம்:Muthusamy.jpg


இரா♣முத்துசாமிஉரையாடுக 18:23, 3 சூன் 2012 (UTC)


அறிமுகக் குறிப்பிறகு நன்றி இரா.முத்துசாமி. நீளம் கருதி சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். நானும் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். கிடைத்ததா எனத் தெரியவில்லை. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:36, 3 சூன் 2012 (UTC)
அறிமுகக் குறிப்புக்கு நன்றி. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு உள்ள இடச்சிக்கலைக் கருதி, தங்கள் தனிப்பட்ட விவரங்களில் சிலவற்றைச் சுருக்கி உள்ளேன். அதே வேளை, தங்கள் விக்கிப் பங்களிப்புகளில் இருந்து கூடுதல் விவரங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் முதற்பக்கத்தில் இருந்து வாசகர்களை ஈர்க்க முடியும். தங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவலை பயனர் பக்கத்தில் முழுமையாகத் தரலாம். வரும் சூன் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு, தங்கள் முதற்பக்க அறிமுகம் இடம்பெறும். நன்றி--இரவி (பேச்சு) 05:27, 12 சூன் 2012 (UTC)

பார்வதிஸ்ரீ அறிமுகக் குறிப்பு - நன்றி[தொகு]

என்னைப்பற்றிய அறிமுகக் குறிப்பினை இத்துனை விரைவாக பதிவேற்றிய தங்கள் அன்பிற்கு நன்றி

இரா♣முத்துசாமிஉரையாடுக 10:52, 4 சூன் 2012 (UTC)


ஐயா வணக்கம். தாங்கள் பங்களித்த கட்டுரைகளை விட, தாங்கள் தொடங்கிய கட்டுரைகளைத் தருதல் நன்று. சான்றாக திருவிளக்கு வழிபாடு,மூலிகைக் குடிநீர்,ஈயம் பூசுதல்,திருமயம் மலைக்கோட்டை,அத்தி மரச்சிலைகள், வைரப்பெருமாள் கதை, ரேக்ளா வண்டிப் பந்தயம், பவானி கைத்தறி தரை விரிப்பு, மரப்பாச்சி பொம்மைகள், கொலுசு, திருமண் ஆகியவற்றை இணைத்து விடுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]


பயனர் பெட்டிகள்[தொகு]

வணக்கம் இரா.முத்துசாமி, நீங்கள் உருவாக்கிய பயனர்பெட்டிகள் தவறான பெயர் வெளியில் உருவாக்கப்பட்டிருந்தது (பயனர் பெயர்வெளி--->ஒரு பதிவு செய்யாத பயனரைப் போல). எனவே அதனை சரியான தலைப்பிற்கு (வார்ப்புரு வெளிக்கு) நகர்த்தியுள்ளேன். தங்கள் பயனர் பக்கத்திலும் அதற்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.. நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 11:57, 16 சூன் 2012 (UTC)

சண்முகம்ப7
பயனர்பெட்டிகள்
வார்ப்புருவை திருத்தியமைத்தமைக்கு நன்றி. இனி எப்படி பதிவேற்ற வேண்டும்? விளக்கினால் பயன்பெறுவோம். தங்கள் அன்புக்கு நன்றி

இரா♣முத்துசாமிஉரையாடுக 12:48, 17 சூன் 2012 (UTC)


வார்ப்புருவை உருவாக்குவதும் எப்போதும் கட்டுரையை உருவாக்குவது போன்றதுதான். (தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்).. முன்னொட்டாக வார்ப்புரு:<<பெட்டியின் பெயர்>> என தட்டச்சிட்டு தொடங்க வேண்டும். இவ்வாறு பயனர் பெட்டிக்கான வார்ப்புருக்களை உருவாக்கும்போது வார்ப்புரு:பயனர் <<பெட்டியின் பெயர்>> என பொதுவாக (கண்டிப்பாக பயனர் சேர்த்துதான் உருவாக்க வேண்டும் என்றில்லை :), அவ்வாறு உருவாக்கினால் BABEL லில் இணைக்கும் போது சரியாக வரும் ) உருவாக்குவோம். தாங்கள் உருவாக்கும் போது பயனர்:<<பெட்டியின் பெயர்>> என உருவாக்கியதால் அது பயனர் பெயர்வெளியாக உருவாகிவிட்டது. அதனை நகர்த்தல் மூலம் வார்ப்புரு வெளிக்கு நகர்த்தினேன். மேலும் பெயர்வெளிகள் பற்றிய விவரங்களுக்கு பார்க்க WP:NS--சண்முகம்ப7 (பேச்சு) 14:06, 17 சூன் 2012 (UTC)

நன்றிகள்! (முதற்பக்க அறிமுகம்)[தொகு]

பணி ஓய்விற்குப் பின்னரும் அதே உத்வேகத்தை விக்கியில் காட்டிவரும் உங்களின் 'தகவலளிப்புத் தொண்டிற்கு' எமது நன்றிகள்!
அன்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:49, 17 சூன் 2012 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் பாராட்டுக்கு நன்றி[தொகு]

பலர் ஆற்றிவரும் விக்கி பணிகள் மலைப்பாக உள்ளது. தாங்கள், ரவி அவர்கள், பார்வதிஸ்ரீ அவர்கள், தென்காசி சுப்பிரமணியன் அவர்கள், த. உழவன் அவர்கள், மதனாஹரன் அவர்கள், சண்முகம் அவர்கள், இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.
இவற்றில் என் பங்கு மிகக் குறைவு. வரும் காலத்தில் தங்களைப் போல கட்டுரைகளில் பிழை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்யலாம் என்று நினைத்துள்ளேன். தங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி.

இரா♣முத்துசாமிஉரையாடுக 13:31, 17 சூன் 2012 (UTC)


முதற்பக்க அறிமுகம் வாழ்த்துகள்[தொகு]

  • ஐயா, தங்களை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ச்சி. தங்களின் ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு நல்கும் தங்கள் பணி மேன்மேலும் சிறந்தோங்க இறைவனை வேண்டுகிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:40, 17 சூன் 2012 (UTC)
தங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி.--Kanags \உரையாடுக 21:09, 17 சூன் 2012 (UTC)
முதல் பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:48, 17 சூன் 2012 (UTC)
தங்கள் முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. தங்கள் பங்களிப்பு முனைப்பாகத் தொடர்ந்திட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 01:03, 18 சூன் 2012 (UTC)
தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. தங்கள் ஓய்வுக்காலத்தை விக்கிப்பீடியாவின் மூலமாகப் பிறருக்குப் பயனுடையதாகச் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 18 சூன் 2012 (UTC)

வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 13:32, 18 சூன் 2012 (UTC)

உங்கள் அறிமுகத்தை இன்று முதற்பக்கத்தில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்கள் நற்பணிகளுக்கு நல்வாழ்த்துகள்! நீங்கள் தொடர்ந்தும் பங்களித்து அறிவு பரப்ப வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 16:33, 20 சூன் 2012 (UTC)
பணிகளுக்கு இடையில் விக்கிபீடியாவிற்கு தாங்கள் அளித்துவரும் பங்களிப்புகள் எப்போதும் முனைப்பாகத் தொடர்ந்திட என் வாழ்த்துகள். --எஸ்ஸார் (பேச்சு) 14:15, 24 சூன் 2012 (UTC)
Nandri (நன்றி).png நன்றி
தமிழ் விக்கி முதற்பக்க அறிமுகம் கண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

இரா♣முத்துசாமிஉரையாடுக


தமிழ் விக்கிபீடியாவில் அனைவருடைய வழிகாட்டுதல்களாலும், பிற உதவிகளாலும் என்னால் இந்த சிறிய பங்களிப்பை செய்ய இயன்றது. இது போல தொடர்ந்து தங்கள் ஆதரவையும் உதவிகளையும் வருங்காலத்திலும் நல்கி உதவ வேண்டுகிறேன். இரா♣முத்துசாமிஉரையாடுக 11:09, 21 சூன் 2012 (UTC)


தனிக் கட்டுரை ஆக்குங்கள்[தொகு]

தாங்கள் தொடங்கிய செட்டிநாட்டு அணிகலன்கள்: கழுத்திரு (நகரத்தார் தாலி), கௌரி சங்கம்‎ எனும் கட்டுரை கழுத்திரு (நகரத்தார் தாலி) எனும் பெயரிலான வழிமாற்றுடன் கழுத்திரு (அணிகலன்) என்கிற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு விட்டது. செட்டி நாட்டினரான நகரத்தார் திருமணங்களில் மணமகள் கழுத்தில் அணியும் கழுத்திரு தனிக் கட்டுரையாகவும், மணமகன் அணியும் கௌரி சங்கம் தனிக் கட்டுரையாகவும் இருப்பதே சிறப்பு. எனவே தாங்களே இக்கட்டுரையிலுள்ள கௌரி சங்கம் எனும் தலைப்பிலான செய்திகளைத் தனியே பிரித்து கௌரி சங்கம் (அணிகலன்) எனும் தலைப்பில் தனிக் கட்டுரையாக்கவும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:48, 26 சூன் 2012 (UTC)

தேனீ எம் சுப்பிரமணி அவர்களுக்கு

தாங்கள் தொடங்கிய செட்டிநாட்டு அணிகலன்கள்: கழுத்திரு (நகரத்தார் தாலி), கௌரி சங்கம்‎ எனும் கட்டுரை கழுத்திரு (நகரத்தார் தாலி) எனும் பெயரிலான வழிமாற்றுடன் கழுத்திரு (அணிகலன்) என்கிற தலைப்புக்கு நகர்த்தியமைக்கு நன்றி. இதுபோல மணமகன் அணியும் கௌரி சங்கம் தனிக் கட்டுரையாகவும் இருப்பதே சிறப்பு என்று தாங்கள் விரும்பியபடி இக்கட்டுரையிலுள்ள கௌரி சங்கம் எனும் தலைப்பிலான செய்திகளைத் தனியே பிரித்து கௌரிசங்கம் (அணிகலன்) எனும் தலைப்பில் தனிக் கட்டுரையாக உருவாக்கியுள்ளேன். தங்கள் வழிகாட்டுதலுக்கும் அன்பிற்கும் நன்றி. இரா♣முத்துசாமிஉரையாடுக 14:06, 26 சூன் 2012 (UTC)


பிறந்த நாள் வாழ்த்துகள்[தொகு]

Anniv.svg வணக்கம் Iramuthusamy அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாகரன் (பேச்சு) 02:30, 20 பெப்ரவரி 2013 (UTC)
Face-smile.svg
இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள் !! --மணியன் (பேச்சு) 02:54, 20 பெப்ரவரி 2013 (UTC)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இரா.முத்துசாமி !! --Animated-Flag-Sri-Lanka.gif ♦khjtd;♦ ♣பேச்சு♣ 16:04, 20 பெப்ரவரி 2014 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு[தொகு]

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:00, 4 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:50, 24 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

விக்கித் திட்டம் 100 அழைப்பு[தொகு]

வணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி...--இரவி (பேச்சு) 15:24, 11 சனவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iramuthusamy&oldid=1879665" இருந்து மீள்விக்கப்பட்டது