உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jagadeeswarann99

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகதீஸ்வரன் நடராஜன்
முகப்பு உரையாடல் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள் திட்டங்கள் மணல்தொட்டி
முகப்பு உரையாடல் உருவாக்கப்பட வேண்டியவை பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள் திட்டங்கள் மணல்தொட்டி


அறிமுகம்

ஜெகதீஸ்வரன்
எனது பெயர் ஜெகதீஸ்வரன் நடராஜன். "கழனிகள் சூழ்ந்த காட்டுப்புத்தூர்" என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைவாள் பாடிய தளத்தில் பிறந்தவன். பள்ளி படிப்பினை காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டையப்படிப்பினை காரைக்கால் பாரதியார் பொறியியற் கல்லூரியிலும் முடித்தவன். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக எம்கியூபிக் சொல்யுசனில் பணியாற்றி வருபவன். எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் வென்ற சைவத்தின் சொந்தக்காரன். சிறுகவிதையும், சிறுகதையும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதிவருபவன். ஓவிய, சிற்ப கலைகளை ரசிக்கத் தெரிந்தவன்.

என்னைப் பற்றி ஒரு வார்த்தையில் யாரேனும் கூறு என்று கட்டளையிட்டால்,. "சைவத்தமிழன்" என்பேன்.

விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம்...

தமிழ்ப் பணிகள்

ஆயிரம் பாக்கள் எழுதியவனே கவிஞன், அச்சு நூலில் எழுத்து வந்தால் மட்டுமே எழுத்தாளன் என்ற நிலை இல்லா நவீன உலகில் எழுத்தாளனாக அறியப்பெறுகிற அடியவர்களில் நானும் ஒருவன்.
இதழ்களில்
 • ஆல்திரை அம்மன் மலரில் கட்டுரைகள் எழுதியது.
 • தினத்தந்தி குடும்ப மலரில் கவிதைகள்
இணையத்தில்
வலைப்பூக்களில்
 • [தமிழ்நாட்டு கிராம தெய்வங்கள் பற்றி ஆவணப்படுத்துதல் - சகோதரன் வலைப்பூவில் தமிழ் மண்ணின் சாமிகள்]
வலைப்பூக்கள்
விக்கிப்பீடியா பொதுவகத்தில் எனது ஓவியங்கள்
எனது ஓவியங்கள்

என் விக்கி வரலாறு

 • விக்கிப்பீடியாவினை வலைப்பூக்களைப் போல எண்ணி தொகுக்கத் தொடங்கி, 2010 ஏப்ரலில் jagadees1808 கணக்கு தொடங்கள். விக்கப்பீடியாவின் கொள்கைகள் புரியாமல் ஏமாற்றம் அடைந்தல். நிர்வாகிகளிடம் கோபம் கொண்டு செயல்பட்டதால் கணக்கு முடக்கப்படல்.
 • 2010 மே மாதம் புதுக்கணக்கு தொடங்கி பங்களிக்க தொடங்குதல்.
 • சனவரி 2011ல் எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரைகளில் பங்களித்தல்,. அறிவியல் துணையோடு எழுத வேண்டிய பாலியல் துறை கட்டுரைகளில் தவறாக பங்களித்து விக்கப்பீடியர்களின் எதிர்ப்புக்கு ஆளாகுதல்.
 • ஆகத்து 2012 சோழிய வெள்ளார் கட்டுரையை திருத்தம் செய்ய நுழைந்து இந்து சமயம் சார்ந்த கட்டுரைகளை விரிவாக்கினேன். பொன்னியின் செல்வன் நூலை படித்துக் கொண்டிருந்ததால் அதனை விக்கியில் தொகுக்க பிற விக்கப்பீடியர்களின் துணையோடு அதன் கதைமாந்தர்களை விக்கப்படுத்துதல். அதன் பிறகு விக்கிநடை பழகிவிட்டது. சைவம் என்ற ஆர்வத்துறையும் கண்டுகொள்ளப்பட்டது.
 • டிசம்பர் 2012லிருந்து தொடங்கிய தொய்வினை 2013 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட முதற்பக்க அறிமுகம் தீர்த்தது. அதிலிருந்து என்னால் இயன்றதை விக்கப்பீடியாவில் செய்துவருகிறேன்.
 • அக்டோபர் 2013 நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

குறிப்பு - என்னுடைய இந்த விக்கி வரலாறு, புதுப்பயனர்களுக்கு ஏற்படும் 1) விக்கப்பீடியா புரிதல், 2) ஆர்வத் துறை தேர்வு ஆகியவைகளை விவரிக்கும். இவற்றிற்கு தீர்வு கண்டே ஒவ்வொரு பயனரும் விக்கிப்பீடியால் பங்களித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பதக்கங்கள்

 • 1
ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்கிறேன். அவ்வப்போது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து சீரிய முறையில் பங்களிப்பதற்காக இப்பதக்கத்தைத் தருகிறேன். உங்களது சீரிய பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.

பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் வாழ்த்துகள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 30 செப்டெம்பர் 2012 (UTC)

 • 2
மறுவருகைப் பதக்கம்
விக்கிப்பீடியாவில் தங்களது மறுவருகை சிறப்பாக உள்ளது. பண்பட்ட உரையாடற் பண்பும் நாளும் நல்ல பல கட்டுரைகளைத் தருவதும் மகிழ்ச்சியளிக்கிறது. மறுவருகை செய்துள்ள தாங்கள் இயன்ற போதெல்லாம் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி !

பொன்னியின் செல்வன் திட்டத்திற்கான பதக்கம் தயாரிப்பு நிலையில் உள்ளது. --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)] (பேச்சு) 18:12, 4 அக்டோபர் 2012 (UTC)

👍 விருப்பம் கார்த்திகேயன் சுட்டியது போலவே தங்களின் மறுவருகை மிகச் சிறப்பாக உள்ளது. விக்கிப்பீடியாவின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டு பயனுள்ள பல கட்டுரைகளைத் தரத் தொடங்கியுள்ளமைக்கு என் உளமார்ந்த நன்றி--இரவி (பேச்சு) 17:38, 25 அக்டோபர் 2012 (UTC)
 • 3
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
வலைவாசல்:இந்து சமயம் உருவாக்கும் பொருட்டும், இன்னபிற அவசியமான கட்டுரைகளை உருவாக்கும் பொருட்டும் அண்மைக் காலங்களில் நீங்கள் இரவு பகலாக உழைப்பதனைக் காண்கிறோம். உள்ளம் நெகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறோம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:19, 3 மே 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • 4
'
கடவுளைக் கலையாகவும் தேடும் காட்டுப்புத்தூர் நடராசன் கட்டுரைக் கண்ணோட்டத்துக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 22:59, 8 ஏப்ரல் 2013 (UTC)
 • 5
ஆயிரவர் பதக்கம்

ஜெகதீஸ்வரன்., பாராட்டுகளும், நன்றிகளும்! உங்களின் நற்பணியினை தொடர்ந்து செய்யுங்கள்! அன்புடன்,--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:44, 23 சனவரி 2014 (UTC)

 • 6
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
பயனர்:Semmal50 இல்லத்துக்கே சென்று, தொடர்ந்து அவருக்கு வழிகாட்டி, சிறந்த ஒரு தொடர் பங்களிப்பாளராக அவரைத் தக்க வைப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சியில் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்க உங்கள் வழிகாட்டல் :) இரவி (பேச்சு) 04:41, 7 சூன் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

[[[:வார்ப்புரு:Fullurl:]] தொகு]  

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

[[[:வார்ப்புரு:Fullurl:]] தொகு]  

பயனர் பெட்டிகள்


இந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்


[[[:வார்ப்புரு:Fullurl:]] தொகு]  

தொடங்கிய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
சைவம்சைவம்
சைவம்

பிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று

இந்து சமய வலைவாசல் சைவ வலைவாசல் வைணவ வலைவாசல்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 14 ஆண்டுகள், 2 மாதங்கள்,  5 நாட்கள் ஆகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jagadeeswarann99&oldid=3710717" இலிருந்து மீள்விக்கப்பட்டது