காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் | |||||
— பேரூராட்சி — | |||||
அமைவிடம் | 10°59′00″N 78°14′00″E / 10.9833°N 78.2333°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
வட்டம் | தொட்டியம்
தலைவர் பதவிப்பெயர் = | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,933 (2011[update]) • 1,005/km2 (2,603/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
10.88 சதுர கிலோமீட்டர்கள் (4.20 sq mi) • 102 மீட்டர்கள் (335 அடி) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/kattuputhur |
காட்டுப்புத்தூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வருவாய் கிராமத்தின் அடிப்படையில் காட்டுப்புத்தூர் கிழக்கு, காட்டுப்புத்தூர் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
[தொகு]திருச்சிராப்பள்ளியிலிருந்து 70 கிமீ தொலைவில் காட்டுப்புத்தூர் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ள மாயனூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10.88 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3076 வீடுகளும், 10933 மக்கள்தொகையும் கொண்டது.[5][6] [7]
வசதிகள்
[தொகு]இங்கு அரசு உதவி பெறும் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, இரு தொடக்கப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, குழந்தையேசு மெட்ரிக் உயர் நிலைப் பள்ளி, காவல் நிலையம், தொலைபேசி நிலையம், பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், கிளை நூலகம் மற்றும் ஆறு கோவில்கள் உள்ளன.
கல்விக் கூடங்கள்
[தொகு]- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மேற்கு
- அரசு மேல் நிலைப் பள்ளி
- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கிழக்கு
- அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி கிழக்கு
- ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி: கி.பி 1903ம் ஆண்டு சிதம்பரம் ரெட்டியார் என்பவர் காட்டுப்புத்தூர் ஜமீந்தார் மேல்நிலைப் பள்ளியை உருவாக்கினார். இப்பள்ளி கி.பி 2003ல் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.
- குழந்தை ஏசு பள்ளி
- விவேகாநந்தர் பள்ளி
திரையரங்குகள்
[தொகு]எம்.டி.கே மற்றும் செந்தில் என இரு திரையரங்குகள் காட்டுப்புத்தூரில் இயங்கின. சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.டி.கே திரையரங்கு இடிக்கப்பட்டு, வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது செந்தில் திரையரங்கு மட்டுமே செயல்படுகிறது.
விவசாயம்
[தொகு]இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். நெல், வாழை, கரும்பு மற்றும் வெற்றிலை முக்கியமாக பயிரிடப்படுகின்றன. காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள நிலங்கள் காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக பிரிந்து வரும் நீரையே தமது பயன்பாட்டிற்கு நம்பியுள்ளன. குடிநீரும் காவிரி ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது.
சந்தை
[தொகு]காட்டுப்புத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தைகேட் என்ற இடத்தில் வாரசந்தை கூடுகிறது. இது இப்பகுதியில் வெள்ளிச்சந்தை என்று அழைக்கபடுகிறது. வெள்ளிச்சந்தையன்று சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் காய்கறி உட்பட்ட விளைப்பொருட்களையும், மற்ற நகரங்களிருந்து வரும் வியாபாரிகள் பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்வர். மொத்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வர். மேலும் வெள்ளி இரவு சந்தையொன்று ஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி அருகே நடைபெறுகிறது.
வங்கிகள்
[தொகு]இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் காட்டுப்புத்தூரில் இயங்குகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் ஏடி.எம்களும் உள்ளன. இத்துடன் வேளாண்மை கூட்டுறவு வங்கியும் இங்கு செயல்படுகிறது.
கோயில்கள்
[தொகு]- பிடாரி மதுரை காளியம்மன் கோயில்
- மாரியம்மன் கோயில்
- ஆழத்துறை பிள்ளையார் கோயில்
- பகவதி அம்மன் கோயில்
- அத்துனூரம்மன் கோயில்
- சாய்பாபா கோயில்
- முருகன் கோயில், முதலியார் தெரு
- விநாயகர் கோயில்
- பெருமாள் கோயில்
- மாசி பெரியண்ண சாமி கோயில், ஆஸ்பத்திரி ரோடு
நாராயண பிரம்மேந்திரர் மடம்
[தொகு]காட்டுப்புத்தூரில் வாழ்ந்த நாராயண பிரம்மேந்திரர் எனும் துறவி தன்னுடைய 120வது அகவையில் சமாதி அடைந்த இடத்தினை மடம் என்று அழைக்கிறார்கள். இந்த மடத்தில் பழநி சாமியார் போன்றோரின் சமாதிகளும் உள்ளன. மடத்துடன் இணைந்தவாறு திருமணம் மண்டமும் நிர்வகிக்ப்பட்டு வருகிறது.
திருவிழாக்கள்
[தொகு]சிவன் கோவில் விழாக்கள், மாரியம்மன் கோவில் விழாக்கள், பிள்ளையார் கோவில் விழா என எல்லா தெய்வங்களின் விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மேலும் தை திருவிழாவான பொங்கல் ஏக போகமாக கொண்டாடப் படுகிறது. மேலும் சித்திரை திருவிழாக்கள், ஆடி பதினெட்டு மற்றும் தீபாவளி ஆகியவை மிக முதன்மையான திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.
காட்சியகம்
[தொகு]-
அத்தனூர் அம்மன் கோயில் முகப்பு காட்டுப்புத்தூர்
-
மதுர காளியம்மன் கோயில் காட்டுப்புத்தூர்
-
கருப்பசாமி கோயில் காட்டுப்புத்தூர்
-
நாராயண பிரம்மேந்திரர் ஐம்பொன் சிலை, காட்டுப்புத்தூர்
பேருந்து வசதிகள்
[தொகு]நாமக்கல், துறையூர், சேலம், தொட்டியம், முசிறி, திருச்சி, மோகனூர், பரமத்தி-வேலூர், கரூர், திருச்செங்கோடு, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் நேரிடையாக தரைவழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துக்களால் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரத்திற்கு நேரடியான பேருந்து தினந்தோறும் இரவு ஒரு முறை மட்டும் காட்டுப்புத்தூரிலிருந்து இயங்குகிறது.
அருகில் உள்ள ஊர்கள்
[தொகு]காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள சீத்தப்பட்டி, கணபதிபாளையம், கருக்கமடை, மூங்கில்ப்பட்டி, ஆலாம்பாளையம்புதூர், சுள்ளிப்பாளையம், பிடாரமங்கலம், முருங்கை போன்ற கிராமங்கள் தங்கள் முதன்மை தேவைகளுக்கு காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Kattuputhur Population Census 2011
- ↑ "Kattuputhur Town Panchayat". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.