பிநாகம்
பிநாகம் என்பது சிவபெருமானுடைய வில்லின் பெயராகும். இதனால் சிவபெருமான் பிநாகபாணி என்று வழங்கப்பெறுகிறார். [1] இவ்வில்லானது திரிபுர சம்ஹாரத்தில் மேருமலையை வில்லாக வளைத்து மாற்றியதாக நம்பப்படுகிறது.
தொன்மக் கதை
[தொகு]கன்வ முனிவர் தவம்
[தொகு]கன்வ முனிவர் என்பவர் பிரம்மாவை நோக்கி தவமிருந்தார். அவருடைய தவக்காலத்தில் அவர்மீது புற்றும், புற்றின் மீது மூங்கில் செடியும் வளர்ந்தன. கன்வ முனிவரின் தவபயனால் பிரம்மா முனிவரின் தவத்தினை ஏற்று வரம் தந்தார்.
விற்களின் தோற்றம்
[தொகு]முனிவரின் தவக் காலத்தில் வளர்ந்த மூங்கிலினைக் கொண்டு பிரம்மா பிநாகம் மற்றும் சாரங்கம் எனும் நிற்களை உருவாக்கினார். [2] இவற்றில் பிநாகம் வில்லை சிவபெருமானுக்கும், சாரங்கம் வில்லை திருமாலுக்கும் தந்தார்.
போட்டி
[தொகு]சிவதனுசான பிநாகம், திருமாலின் சாரங்கம் என இரண்டில் எது சிறந்தது என தேவர்களுக்கு கேள்வி எழுந்தது. அதனால் திருமாலும், சிவபெருமானும் தங்கள் வில்லோடு போட்டியிட்டனர். அப் போட்டியில் சிவபெருமானின் கரவலிமை தாங்காமல் பிநாகம் பின்னப்பட்டது. [2] போட்டி முடிந்ததும் பிநாகம் தேவரதருக்கு அளிக்கப்பட்டது. இந்த தேவரதர் வம்சம் சிவதனுசை பாதுகாத்து வந்தனர். இறுதியாக சிவதனுசு தேவரதரின் வம்சமான ஜனகரிடம் இருந்தது.
இராமர்
[தொகு]விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே வந்த ஜனகரின் கைகளுக்கு வந்தது. ஜனகரின் மகளான சீதையின் சுயம்வரத்தில் சிவதனுசான பிநாகத்தின் நாணேற்றும் போட்டி நடந்தது. அப்போட்டியில் இராமரின் கைகளால் வில் பூட்டப்படும் போது உடைந்தது.
இலக்கியத்தில்
[தொகு]- வியலாய்க் கொண்ட தென்னென்றேன்
- விளங்கும் பிநாக மவைமூன்று - திருவருட்பா (பாடல் எண் - 1814)
காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Temple News - News - Dinamalar Temple - ஆண்டாள் பாடியது போல் நல்ல மழை பொழியட்டும்". web.archive.org. 12 September 2016. Archived from the original on 12 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help); no-break space character in|title=
at position 38 (help)CS1 maint: unfit URL (link) - ↑ 2.0 2.1 "இது 'தனுசு'வின் கதை, It is "the story of tanusu". Maalaimalar.