ஈசானம்
ஈசானம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான இது அருளும் பணிபுரியும் ஒரு முகமாகக் கருதப்படுகிறது.
சிவத்தோற்றம்
[தொகு]விஸ்வரூப கற்பத்தில் மலரயன் என்பவர் சிவபெருமானை தியானித்தார். அவருடைய தியானத்தில் மகிழ்ந்து சிவபெருமான் பிறைச் சந்திரனை சடாமுடியில் தாங்கி, கோரைப்பற்களுடன் காட்சியளித்தார். அவருடன் இரு வாணி மற்றும் தேவர்களின் தாயார் ஆகியோர் இரு புறமும் இருந்தனர். இத்தோற்றம் ஈசானமாகும்.[1]
சிவமுகம்
[தொகு]சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஐந்தாவது முகமாகும். இம்முகம் படிக நிறமுடையதெனவும், வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக ஊர்த்தவ தாண்டவம் புரிந்து அருள்கின்றார்.பஞ்சபூதங்களில் ஆகாயத்தின் தன்மை வாய்ந்ததாக இம்முகம் அறியப்படுகிறது.
சிவபெருமான் ஈசான முகத்திலிருந்து புரோக்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களை தோற்றுவித்தார் எனவும்,[2] ஆறுபத்தாறு முனிவர்களும் ஆகம இரகசியப் பொருளை இம்முகத்தின் மூலம் அறிந்தனர் என்றும் கூறப்படுகிறது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=10974 லிங்க புராணம் - தினமலர் கோயில்கள்
- ↑ http://www.ammandharsanam.com/magazine/April2012unicode/page027.php பரணிடப்பட்டது 2013-05-07 at the வந்தவழி இயந்திரம் ஆகம சாஸ்திரம் சுப்ரமணிய சிவாச்சார்யா அம்மன் தரிசனம் இணையதளம்