சிவ அம்சம்
சிவ அம்சம் அல்லது சிவாம்சம் என்பது சைவக் கடவுளான சிவபெருமானின் சக்தியினைக் கொண்டவர்கள் ஆவார்கள். அனுமன், [1] வீரபத்திரர்,[2] சூரியன்,[3] அம்பிகை போன்றவர்கள் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார்கள். கடவுள்கள் மட்டுமின்றி பாசுபதர்கள், சுவாமி விவேகானந்தர் போன்றோரையும் சிவாம்சம் பொருந்தியவர்களாக கருதுகிறார்கள்.
அனுமார்[தொகு]
கேசரி - அஞ்சனை ஆகியோருக்கு பிறந்தவர் அனுமான். இவர் பிறப்பிற்காக அஞ்சனை திருமலையில் தவமிருந்தனர். அந்த தவத்தில் மகிழ்ந்த வாயுபகவான், தினமும் ஒரு கனியை அஞ்சனைக்கு அளித்தார். அதில் ஒரு நாள் சிவபெருமானுக்கு வைத்திருந்த பழத்தினை அளித்தார். இதனால் அஞ்சனை கருவுற்றமையால் அனுமார் சிவபெருமானின் அம்சமாகவும், வாயு புத்திரனாகவும் கருதப்படுகிறார். [1]
அகோர வீரபத்திரர்[தொகு]
அகோர வீரபத்திர் சிவ அம்சமாக கருதப்படுகிறார். அதனால் அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோயிலில் அவரே மூலவராக இருக்கிறார். [2]
இவற்றையும் காண்க[தொகு]
மேலும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "சிவ அம்சம் பொருந்திய ஹனுமார் ஜூன் 28, 2016". 2016-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 அனுமந்தபுரம் ஸ்ரீ அகோர வீரபத்திரர்! மார்ச் 3, 2016 தினமணி
- ↑ "தைப்பூசம் கொண்டாட்டம் ஏன்? 19 ஜனவரி 2016". 2021-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-10 அன்று பார்க்கப்பட்டது.