உள்ளடக்கத்துக்குச் செல்

சிவக்கலப்பு அடையும் நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமது உடலானது நிலம்,நீர்,தீ,காற்று,வாயு என்னும் ஜம்பூதங்களால் ஆனது.ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் ஆகிய ஜம்புலன்களும் மேற்கூறிய ஜம்பூதங்களின் தன்மாத்திரைகளாகும்.இத்தன்மாத்திரைகள் ஜம்புலன்களின் வழி சென்றலைந்து மனத்தில் கர்ம வாசனைகளைக் கொண்டு குவிக்காமல்,அஃது அததன் வழியில் நிற்க வேண்டும்;தன்மாத்திரைகளை அடக்கி வென்றால்,பூத சித்தி எய்தும் பிறகு சேதனம் அறிவுப்பொருளான ஆன்மாவுடன் சேரும்;அப்போது ஒரு சோதி தோன்றும்.பின்னர் சாதனத்தால் அச்சோதியும் சுத்த சிதாகாச வெளியில் விளங்கும்.அருட்சோதியுடன் சேரும்.எவ்வாறெனில் கடல் நீரில் கலந்துள்ள உப்பானது கடல் நீரைப் பாத்தியில் பாய்ச்சியபின் அந்நீர் சூரியனின் வெம்மையால் வற்றி உப்புக்கட்டியாகின்றது.இவ்வாறான உப்பினைக் கொண்டு மனித உருவினையோ,விலங்கின் உருவினையோ கடலில் இட்டால் கடலுடன் கலந்து ஒன்றாவது போல சிவனருட்கதிரால் எழுந்த ஆன்மா வினை தீர்ந்தபின் மீண்டும் சிவனுள் அடங்கி விடும்.சீவனனானது சிவனுள் அடங்கி விடும்.

  • திருமந்திரம் (133)

காண்க[தொகு]


உசாத்துணை நூல்கள்[தொகு]

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்