நெருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எரிக்கப்படும் விறகுகள்
காட்டுத்தீ
நெருப்பின் நான்முக வடிவம்

நெருப்பு அல்லது தீ அல்லது அக்கினி (Fire) என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.[1]. துருப்பிடித்தல் (Rusting), சமிபாடு போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை.

The ignition and extinguishing of a pile of wood shavings.
Slow motion fire sequence 1000 frame/s

நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான்.உணவு சமைத்தான்.


நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் கடவுளாகவும் வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும்.

நெருப்பின் சுடரில் மேற்பரப்பில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். நெருப்பானது கட்டுப்பாடற்று ஏற்படும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், தாவரங்கள், விலங்குகள், மனிதருக்கு ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை இயற்கையில் நேரும் நெருப்பானது, சூழல் மண்டலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அல்லது மீளமைத்துக் கொள்ளவும் உதவுகின்றது]].[2].

Photo of a fire taken with a 1/4000th of a second exposure


நெருப்பின் தோற்றுவாய்[தொகு]

பொதுவாக நெருப்பு என்பது பின்வரும் நிலைகளில் தோன்றுகின்றது.

1. கட்டுப்பாடான எரித்தல் - ஓர் எரிபொருள் எரிக்கப்படும்போது தோன்றும் நெருப்பு. எ.கா.: சமையலுக்கு, அல்லது வெப்பத்தை உருவாக்க விறகுகளையோ, அல்லது வேறு எரிபொருளையோ எரித்தல்.

2. கட்டுப்பாடற்ற எரிதல்

  • இது விபத்தினால் தற்செயலாக தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.:எண்ணெய்க் கிணறு, அல்லது கட்டடங்களில் தானாக ஏற்படும் நெருப்பு.
  • இயற்கையாகத் தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.: காட்டுத்தீ
  • திட்டமிட்டு எரிப்பை செய்வதனால் ஏற்படும் பெரு நெருப்பாக இருக்கலாம். எ.கா.:வாழிடங்களை எரிக்கும்போது, அது பின்னர் தானாகவே பெரு நெருப்பாக கட்டுப்பாடற்று எரிதல்.


சுடர்[தொகு]

நெருப்பு என்பது சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் தீச்சுடர் அல்லது தீச்ஜுவாளையையே குரிக்கின்றது.சுடர் என்பது புலப்படும் ஒளிக்கற்றை , அகச்சிவப்பு, மற்றும் சில நேரங்களில் புற ஊதா ஒளியயும் உமிழும். இது அதிர்வெண் நிறமாலை உமிழ்கின்ற வாயுக்கள் மற்றும் திட பொருளைக்கொண்ட ஒரு கலவையாகும்.


இயற்கை மாசுபாடு[தொகு]

நெருப்பு அனைத்து பொருளையும் கரியாக மாற்றிவிடும். எனவே பூமியில் உள்ள கார்பனின் அளவை நெருப்பு அதிகரிக்கிறது. எனவே சுற்றுசூழல் மாசுபடுகின்றது.இந்தியாவில் நெருப்பின் வரலாறு[தொகு]

நெருப்ப்பு என்பது தீமையை அழித்து புனிதம் சேர்ப்பத்தாக இந்துக்களால் நம்பப்படுகிறது.அதனால் திருமணம் உட்பட பல சுப நிகழ்வுகளில் இந்தியர்கள் அக்னியை பயன் படுத்துகின்றனர்.

வேத காலத்திலிருந்தே நெருப்பு புனிதமாக கருதப்படுகிறது.சொவ்ராஸ்டிரர்கள் எனும் இந்தியர்கள் நெருப்பை மட்டுமே தெய்வமாக வழிபடுவார்கள்.


நெருப்பின் வகைகள்[தொகு]

நெருப்பு பல காரணங்களால் உருவாக்கப்படுகின்றன. உராய்வதால் உருவாகும் நெருப்பே அனைத்திற்கும் பிரதானம் ஆகும்.

  • இயற்கை நெருப்பு
  • செயற்கை நெருப்பு


இயற்கை நெருப்பு[தொகு]

காட்டுத்தீ போன்றவை இயற்கை நெருப்பின் வகைகளாகும்.சூரியன் இயற்கை நெருப்பிற்கு உதாரணம் ஆகும்.


செயற்கை நெருப்பு[தொகு]

தீக்குச்சினால் உருவாகும் நெருப்பு போன்றவை செயற்கை நெருப்பு ஆகும்.

நெருப்பு குறித்த படிமங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Glossary of Wildland Fire Terminology. National Wildfire Coordinating Group. November 2009. http://www.nwcg.gov/pms/pubs/glossary/pms205.pdf. பார்த்த நாள்: 2008-12-18 
  2. Begon, M., J.L. Harper and C.R. Townsend. 1996. Ecology: individuals, populations, and communities, Third Edition. Blackwell Science Ltd., Cambridge, Massachusetts, USA.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெருப்பு&oldid=2208427" இருந்து மீள்விக்கப்பட்டது