பந்தம்
பந்தம் அல்லது தீவெட்டி என்பது ஒரு விளக்கு என்று கூறலாம். அக்காலத்தில் பந்தம் பெரிய அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மின்சாரம் இல்லாத காலத்தில் பந்தம் மக்கள் வாழ்க்கையில் ஓர் அன்றாட உபயோகப்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றக இருந்து வந்தது. பந்தம் பொதுவாக கந்தல் துணியை கொண்டு செய்யப்படுவது ஆகும். கந்தல் துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டப்பட்டு நெருப்பை வைத்து தீ முட்டப்படுவது ஆகும். பந்தம் சுற்றி உள்ள இடத்திற்கு ஒளியைக் கொடுக்கும்.