உள்ளடக்கத்துக்குச் செல்

தீப்பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தீப்பெட்டி

தீப்பெட்டி என்பது தீக்குச்சிகளை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.அந்த மேற்பரப்பில் போஸ்பரசு தடவப்பட்டிருக்கும். இதைக்கண்டு பிடித்தவர்கள் சுவீடனின் யோன், கொரல் சண்டேஸ்டம் ஆவார்.அதன் பின் பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் தீப்பெட்டி என அழைக்கப்பட்டது. முற்காலத்தில் இதன் உடல் மரத்தால் ஆக்கப்பட்டிருந்தது.தற்போது இது மெழுகு நிறைந்த ஒரு காகிதத்தால் ஆக்கப்படுகிறது.

தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தொடர்பான பிற பொருட்களை பொழுதுபோக்காக சேகரிப்பது பில்லுமெனி எனப்படும்.[1]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்பெட்டி&oldid=1681746" இலிருந்து மீள்விக்கப்பட்டது