அவதார நந்தி
அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.
விஷ்ணு நந்தியாக மாறிய கதை
[தொகு]அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிட புறப்பட்டார்.
அவர் அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெருகிறது.[1]
இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி பிரதிஷ்ட்டை செய்யப்படுவதில்லை.
காண்க
[தொகு]கருவி நூல்
[தொகு]சிவ ஆகமம்
ஆதாரம்
[தொகு]- ↑ http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2414&Cat=3 பரணிடப்பட்டது 2013-04-08 at the வந்தவழி இயந்திரம் விஷ்ணு நந்தியாக மாறிய கதை