நாகாபரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிங்கத்தின் மீது சூட்டப்பட்டிருக்கிற வெள்ளி நாகாபாரணம்

நாகாபரணம் என்பது இந்து சமயக் கோயில்களில் இறைவனுக்கு அலங்காரம் செய்யப்பயன்படும் ஆபணங்களில் ஒன்றாகும். சிவாலயங்களின் திருவிழா, பூசை நாட்களில் மூலவரான இலிங்கத்தின் மீது இந்த ஆபணம் சாற்றப்படுகிறது. ஐந்து தலை பாம்பானது படம் எடுப்பதைப் போன்ற அமைப்புடன் இந்த ஆபரணம் காணப்படுகிறது.

சிவபெருமான், விநாயகர், நாகங்கள், அம்மன் ஆகியோருக்கு நாகாபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.

நாகாபரண அமைப்பு[தொகு]

இந்த ஆபணத்தில் ஐந்து தலை நாகம் படமெடுப்பதைப் போன்றும், அதனுடைய உடலானது லிங்கத்திருமேனியை சுற்றியும் அமைந்திருக்கும். செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் இந்த நாகாபரணம் செய்யப்படுகிறது.

நாகங்களின் உருவ அமைப்பினை செய்து இலிங்கத்திற்கு சூட்டுகின்றனர். இந்த ஆபணத்தினை பக்தர்கள் செய்து இந்துக் கோயில்களுக்குத் தருகின்றனர். அதனை யாகங்களில் வைத்து பூசித்து இறைவனுக்கு அணிவிக்கின்றனர். [1]

சிவாலயத்தில்[தொகு]

சிவாலயத்தில் மூலவரான லிங்கத் திருமேனியைச் சுற்றி ஐந்து தலை நாகம் படமெடுப்பதைப் போன்ற தோற்றத்தில் நாக ஆபரணம் வைக்கப்படுகிறது. அக்னி நட்சத்திரக் காலங்களில் மேலிருந்து நீரை சொட்டுகின்ற தாராபாத்திரம் அமைக்கப்பட்டு அபிசேகம் நடைபெறுவதால் அக்காலங்களில் இந்த நாகாபரணம் வைக்கப்படுவதில்லை. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. ஆதிகும்பேஸ்வரருக்கு ரூ. 7 லட்சத்தில் புதிய நாகாபரணம் 07th February 2016 தினமணி
  2. அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் திருவண்ணாமலை கோவிலில் நாளை முதல் தாராபிஷேகம் மே 03, 2016 மாலைமலர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாபரணம்&oldid=2119992" இருந்து மீள்விக்கப்பட்டது