அதோமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதோமுகம் என்பது சிவனது ஆறாவது முகமாகும்.[1][2] அம்முகம் ஆறாவது முகம் என்றும் அறியப்படுகிறது.

சிவபெருமான் சதாசிவ மூர்த்தியின் உருவத்தில் ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோ சோதம், அதோமுகம் ஆகிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். ஆனால் ஆறாவது முகமான அதோமுகம் சூட்சும முகமாக கூறப்படுகிறது. இம்முகம் வெளிதெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

அதோமுகத்தின் தன்மை[தொகு]

அதோமுகத்தைக் கொண்ட சிவன் ஊழியின் தலைவனாவான். இவன் சூரபதுமன் என்பவனை அழிக்க தன் அதோமுகத்தை வெளிப்படுத்திய போது உமையும் அதை கண்டு அஞ்சி ஓடினாள். இந்த அதொமுகத்தை ஊழியின் போதும் முருகனை படைத்த போதும் மட்டும் உக்கிரமாக வெளிப்படுத்தும் சிவன் சனகாதி முனிவர்களுக்கு அருளும் போது மட்டும் சாந்தமாகவே வெளிப்படுத்தினார்.[3]

அதோமுக தரிசனம்[தொகு]

அதோமுக தரிசனம் என்பது திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இருபதாம் பகுதியாகும். [4] இதில் அதோமுகமானது எட்டு திசைகளையும், அகிலாண்டத்தினையும் தாங்கியிருப்பதாக திருமூலர் கூறுகிறார். [5]

அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்
அதோமுகம் தன்னோடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே. (திருமந்திரம் பாடல் 524)
பொருள்

அதோமுகம் என்பது கீழே பிரணவமாகிய அண்டத்தில் பழமையாக உள்ளது. அது சூக்கும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை யுடையது. சத்தாகிய ஓம் என்னும் பிரணவ வடிவாயுள்ள ஒளி பொருந்திய பராசத்தியுடன் கூடிய பிரனும் அதோ முகனாயும் ஊழியைச் செய்பவனாயும் உள்ளான்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.trinethram-divine.com/2011/12/sivan.html Sivan-சிவபெருமான் - அதோமுகம் - நெற்றிக்கண்.
  2. http://temple.dinamalar.com/New.php?id=1465 அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில் - அதோமுகம் எனும் மேல்நோக்கிய ஆறாவது முகமும்
  3. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம் .......... அதோமுகம் கீழண்ட மான புராணன் அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும் சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோமுகன் ஊழித் தலைவனு மாமே. அதோமுகம் மாமல ராயது கேளும் அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே. - திருமந்திரம் - 2 :20
  4. http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2420#top தமிழாய்வு தளத்தில் திருமூலரின் திருமந்திரம் - பார்த்த நாள் ஜூலை 21
  5. அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம் திருமந்திரம் -521 பாடல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதோமுகம்&oldid=1849924" இலிருந்து மீள்விக்கப்பட்டது