மகேசுவர மூர்த்தங்கள்
Appearance
மகேசுவர மூர்த்தங்கள் என்பவை சைவக் கடவுளான சிவபெருமானின் இருபத்து ஐந்து உருவங்களைக் குறிப்பதாகும். இந்த வடிவங்கள் சிவனது அறுபத்து நான்கு 64 சிவவடிவங்களிலும் இடம்பெறுகின்றன.[1]
இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வகைப்பாடு
[தொகு]சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
- தற்புருஷம் - பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
- அகோரம் - கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
- வாமதேவம் - கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
- சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்
மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல்
[தொகு]மகேஸ்வர வடிவங்கள், அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள்[2]
- சோமாஸ்கந்தர் - திருவாரூர்
- நடராஜர் - சிதம்பரம்
- ரிஷபாரூடர் - வேதாரண்யம்
- கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
- சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
- பிட்சாடனர் - காரைக்கால்
- காமசம்ஹாரர் - குறுக்கை
- கால சம்ஹாரர் - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
- சலந்தராகரர் - திருவிற்குடி
- திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
- கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
- வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
- கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
- கங்காளர் - திருச்செங்காட்டங்குடி (திருவாரூர்)
- சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
- கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
- சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
- ஏகபாதமூர்த்தி - மதுரை
- லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
- சுகாசனர் - காஞ்சிபுரம்
- உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
- அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
- அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
- நீலகண்டர் - சுருட்டப்பள்ளி (ஆந்திரா)
கருவிநூல்
[தொகு]- பேராசிரியர். அ.கி. மூர்த்தி, சைவசித்தாந்த அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியாடு, 1998
காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-07. பார்க்கப்பட்ட நாள் 2013-05-24.
- ↑ http://www.periva.proboards.com/thread/318