நெற்றிக்கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண் காணப்படுதலும் ஒன்றாகும். இதன் காரணமாக சிவபெருமான் முக்கண்ணன் என்றும், நெற்றிக் கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானது மனைவியான சக்தியும் பிறை, நெற்றிக்கண்ணோடு இருக்கும் திருக்கோலமும் உள்ளது.


நெற்றிக்கண் அமைப்பு[தொகு]

சிவபெருமானுக்கு நெற்றியின் நடுவே செங்குத்தாக ஒரு கண் இருப்பதாக ஆகமங்கள் விளக்குகின்றன. இந்தக் கண் ஞானத்தின் அடையாளமாகவும், அக்னியின் வடிவமாகவும் கூறப்படுகிறது.

சிவன் மிகுந்த கோபமடையும் வேளையில் இந்த கண்ணை திறந்தால், தீப்பிழம்புகள் வெளிவருமென சைவர்கள் நம்புகிறார்கள்.

காமத்தகனம்[தொகு]

தியானம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் மீது காமன் அம்பெய்தி காதல் வர முயற்சி செய்யும் போது, சிவன் கோபம் கொண்டு தன்நெற்றிக் கண் திறந்து அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தேவாரத்தில்[தொகு]

- சுந்தரர்

சுந்தர மூர்த்தி நாயனார் அவர்கள் தேவாரத்தில் திருவன்பார்த்தான்பனங்காட்டூர் பதிகத்தில் சிவபெருமானை நெற்றிக்கண் உடையான் என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்றிக்கண்&oldid=2134563" இலிருந்து மீள்விக்கப்பட்டது