சிவாயுதங்கள்
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் ஆயுதங்கள் சிவாயுதங்கள் என்று அறியப்படுகின்றன. இந்து சமயத்தில் ஒவ்வொரு இறைவனுக்கும் தனித்தனியாக ஆயுதங்கள் வரையரை செய்யப்பட்டுள்ளன. சிவபெருமானுக்கு திரிசூலமும், மழுவும் பல்வேறு சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணப்படுகிறது. இவையன்றி புராணங்களிலும் இதிகாசங்களிலும் பல்வேறு ஆயுதங்களை சிவபெருமான் பயன்படுத்தியமையும், அரக்கர் கொல்ல அந்த ஆயுதத்தினை தவமிருந்து மனிதர்கள் பெறுவதையும் காணலாம்.
மகாபாரதத்தில் பாசுபத அஸ்திரம் என்பதை பெறுவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து அர்ஜுனன் பெற்றுக் கொள்வார். திருமால் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை வணங்கும் போது ஒரு மலர் குறைந்திட தன்னுடைய ஒரு கண்ணையே மலராக எண்ணி பூசை செய்தார். அப்போது சிவபெருமான் சக்ராயுதத்தினை திருமாலுக்கு அளித்தார். இவ்வாறு சிவபெருமான் தன்னுடைய ஆயுதங்களை அளித்தமைக் குறித்து புராணங்களில் செய்திகள் உள்ளன.
சிவாயுதங்கள்
[தொகு]- திரிசூலம் - திரி என்றால் மூன்று என பொருள்படும். மூன்று கூர்முனைகளை உடைய ஆயுதம் திரிசூலமாகும்.
- மழு - கோடாரி போன்ற அமைப்பினை உடையது.
- பிநாகம் - சிவபெருமானுடைய வில்
- சிவ தனுசு - சிவபெருமானுடைய வில்
- கட்வங்கம் - காபாலிக ஆயுதம் [1]
- சந்திரஹாசம் - வாள்
இவற்றில் மழு என்பது சிற்பங்களில் சிவபெருமானை அறியப்பயன்படுகின்ற ஆயுதமாகும். சிவபெருமானுடைய வடிவங்களே இந்த மழுவினைத் தாங்கியபடியுள்ளனர்.
ஆயுதங்கள் அல்லாத கருவிகள்
[தொகு]சிவாயுதங்கள் அல்லாத சில பொருட்களை சிவபெருமான் கைகளில் வைத்துள்ளார். அவை மான், உடுக்கை, அக்னி போன்றவையாகும்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ http://poetryinstone.in/lang/ta/2012/03/23/some-macabre-attributes.html பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம் சில வினோத ஆயுதங்கள் - கல்லிலே கலைவண்ணம் கண்டோம்