மழு
Appearance
(மழு (சிவனாயுதம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மழு என்பது சிவபெருமானின் ஆயுதங்களுள் ஒன்றாகும். [1] தருகாவனத்து ரிஷிகளின் செருக்கினை அகற்ற, சிவபெருமான் சென்ற போது ரிஷிகள் தவவலிமையால் ஏவிய புலியை உரித்து ஆடை அணிந்து கொண்டதாகவும், கொல்ல ஏவிய மழுவினை தனது ஆயுதமாக ஏற்றுக்கொண்டதாகவும் சைவ நூல்கள் கூறுகின்றன.
மழுவை ஏந்துதல் சிவனுடைய அடையாளமாகவும், சிவவடிவங்களான வீரபத்தரர், பைரவர் போன்றோரின் அடையாளமாகவும் கூறப்பெறுகின்றன.
சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் பின் இருகைகளில் ஒன்றில் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார். சிவ வடிவங்களை அடையாளம் காண்பதற்கு இந்த ஆயுதம் பயன்படுகிறது.
சிவபெருமானின் ஆடைக்கும், பூசைப் பொருள்களுக்கும் உரியவரான சண்டிகேசுவரர் இந்த ஆயுதத்தினை கொண்டுள்ளார்.
சைவத்தமிழ் இலக்கியங்களில்
[தொகு]- மறியுடை யான்மழு வாளினன் - திருப்பூந்துருத்தி 2
காண்க
[தொகு]ஆதாரம்
[தொகு]- ↑ கையில் மழு ஏந்தினான் காண்; - திருச்சிவபுரம் திருத்தாண்டகம் 867