தமிழ் விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-ta.svg
Tamil Wikipedia main page screenshot 15.12.2013.png
உரலி http://www.ta.wikipedia.org/
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்) தமிழ் மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்


தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2014 மே மாதக் கணிப்பின் படி 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[3] தமிழ் விக்கியில் இன்று வரை மொத்தம் 1,16,119 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், திராவிட மொழி விக்கிகளில் முதல் இடத்திலும் தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள் தமிழ் இரண்டாவதாக உள்ளது. வரலாற்று நோக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்[தொகு]

 • பக்கங்கள் = 3,38,058
 • கட்டுரைகள் = 1,16,119
 • கோப்புகள் = 7,767
 • தொகுப்புகள் = 25,21,067
 • பயனர்கள் = 1,33,563
 • சிறப்பு பங்களிப்பாளர்கள் = 325
 • தானியங்கிகள் = 187
 • நிருவாகிகள் = 35
 • அலுவலர்கள் = 4
அக்டோபர் 31, 2013இன் படி கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்
(* குறியீடு உள்ளவை கடந்த மாதத்தில் பத்துக்கும் குறைவான தொகுப்புகளை பெற்றதால் மார்ச் 31, 2012இன் தரவு இணைக்கப்பட்டுள்ளது
மொழி[4](அகரவரிசைப்படி) கட்டுரைகளின் எண்ணிக்கை[5]
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as)
2,371
இந்தி விக்கிப்பீடியா (hi)
99,873
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or)
4,571
கன்னட விக்கிப்பீடியா (kn)
15,696
காஷ்மீரி மொழி விக்கிப்பீடியா* (ks)
129
குஜராத்தி விக்கிப்பீடியா (gu)
23,456
வடமொழி விக்கிப்பீடியா (sa)
10,642
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)
556
தமிழ் விக்கிப்பீடியா (ta)
57,216
தெலுங்கு விக்கிப்பீடியா (te)
54,138
நேபால் பாசா விக்கிப்பீடியா (new)
71,508
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)
25
பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா (pa)
7,760
பாளி விக்கிப்பீடியா* (pi)
3,149
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)
25
போச்புரி விக்கிப்பீடியா (bh)
2,861
மராத்தி விக்கிப்பீடியா (mr)
40,344
மலையாள விக்கிப்பீடியா (ml)
33,528
வங்காள விக்கிப்பீடியா (bn)
27,045

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.hindu.com/mp/2009/05/21/stories/2009052150760100.htm
 2. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
 3. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
 4. List of Indian language wiki projects
 5. Wikipedia Statistics

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விக்கிப்பீடியா&oldid=2512200" இருந்து மீள்விக்கப்பட்டது