பயனர் பேச்சு:Aadhitharajan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Aadhitharajan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:27, 5 சூலை 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. புதிதாக வந்து வானியல் தொடர்பாக கட்டுரைகள் பல எழுதுவது மகிழ்ச்சி. மேலும் தங்கள் வியக்கும் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 16:39, 15 ஆகத்து 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி @Maathavan: Aadhitharajan (பேச்சு) 16:49, 15 ஆகத்து 2016 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:39, 26 ஆகத்து 2016 (UTC)

உருவாக்கிய கட்டுரைகளின் பட்டியல்[தொகு]

நான் உருவாக்கிய பக்கங்களின் பட்டியலை காண்பது எப்படி? Aadhitharajan (பேச்சு) 02:33, 26 ஆகத்து 2016 (UTC)

வணக்கம் நண்பரே, செம்மையாக விக்கியில் இயங்குவதற்கு வாழ்த்துகள். நீங்கள் புகுபதிகை செய்தபின்பு விக்கியின் மேல்பக்கத்தில் வலமிருந்து இடமாக பங்களிப்புகள் என்ற இணைப்பு இருக்கும். அதனை சொடுக்கினால், உங்களுடைய பங்களிப்பு பக்கம் திறக்கும். அப்பக்கத்தின் கீழே, தொடங்கிய பக்கங்கள் எனும் இணைப்பின் மூலம் நீங்கள் உருவாக்கிய பக்கங்களின் பட்டியலைக் காணலாம். இப்போதைக்கு இங்கு சொடுக்கினால் உங்களால் தொடங்கப்பட்ட பக்கம் கிடைக்கும். வேறு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:39, 26 ஆகத்து 2016 (UTC)
உதவிக்கு மிக்க நன்றி @Jagadeeswarann99: தற்போது நகர்பேசி மூலம் பங்களிப்பதால், பல தகவல்களை கட்டுரைகளில் இணைக்க முடியவில்லை. 2ஜி இணைப்பின் வேகமும் குறைவாக உள்ளது. கணினியில் இணையம் பயன்படுத்தும் போது நான் உருவாக்கிய கட்டுரைகளை தேட உங்கள் உதவி எனக்கு உதவும். நன்றி -- Aadhitharajan (பேச்சு) 11:02, 26 ஆகத்து 2016 (UTC)

Inter Wiki Translator[தொகு]

வணக்கம், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது இந்தக் கருவியை நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். மிகவும் பயனுள்ளது.--Kanags \உரையாடுக 11:16, 28 ஆகத்து 2016 (UTC)

நன்றி @Kanags: முயற்சி செய்து பார்க்கிறேன். :) முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40GB இணைய இணைப்பு பயன்படுத்தி வந்தேன். ஆனால் 4ஜி அப்கிராடு என்று சொல்லி 40GB ஐ 3GB ஆக்கிவிட்டனர். ஆதலால் புதிய இணைய இணைப்பு தேடி வருகிறேன். அதுவரை நகர்பேசியில் 2Gயில் மட்டுமே பங்களிக்க முடியும் :( அதுவரை நான் ஏதாவது தவறு செய்தால் மன்னித்து விடுங்கள். நான் தமிழ் விக்கியில் இணைந்ததில் இருந்து வழிகாட்டி வருவதற்க்கு நன்றி, Aadhitharajan (பேச்சு) 15:25, 28 ஆகத்து 2016 (UTC)
@Kanags: இந்த பக்கத்தை "எண்ணூர் அனல்மின் நிலையம்" என்னும் தலைப்பிற்கு நகர்த்தி உதவுங்கள். நன்றி -- Aadhitharajan (பேச்சு) 07:05, 29 ஆகத்து 2016 (UTC)

@Aadhitharajan: நன்றி தங்களது தகவலுக்குUthayai (பேச்சு) 14:47, 23 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aadhitharajan&oldid=2121621" இருந்து மீள்விக்கப்பட்டது