உள்ளடக்கத்துக்குச் செல்

சாய் சுதர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் சுதர்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பரத்வாஜ் சாய் சுதர்சன்
பிறப்பு15 அக்டோபர் 2001 (2001-10-15) (அகவை 23)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2021–தற்போதுதமிழ்நாடு
2022–தற்போதுகுஜராத் டைட்டன்ஸ்
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 8 ஏப்ரல் 2022

சாய் சுதர்சன் என்கிற பரத்வாஜ் சாய் சுதர்சன் (பிறப்பு: 15 அக்டோபர் 2001) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர். [1] [2] தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். [3] [4] இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

2019/20-இல் பாளையம்பட்டி ராஜா கிண்ணப் போட்டிகளில், 52.92 சராசரியில் 635 ஓட்டங்களுடன் ஆழ்வார்பேட்டை துடுப்பாட்டக் கழகத்தின் முன்னணி ஆட்டக்காரராக இருந்தார். [5] இவர் 2021-22-இல் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் தமிழ்நாட்டிற்காக 4 நவம்பர் 2021 அன்று, தனது முதலாவது இருபது20 போட்டியில் களம் கண்டார். [6] 2021-22 விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாட்டிற்காக 8 டிசம்பர் 2021 அன்று பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [7]

ஐபிஎல்

[தொகு]

பிப்ரவரி 2022-இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸால் வாங்கப்பட்டார்.[8] தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சுதர்சன் காட்டிய ஆட்டத்திறன், ஐபிஎல் அணியில் இவரைத் தேர்ந்தெடுக்க வழிவகுத்தது.[9]

ஏப்ரல் 2022-இல், விஜய் சங்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, சுதர்சன் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.[10] சுதர்சனின் தந்தை டாக்காவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்ற ஒரு தடகள வீரர். இவரது தாயார் மாநில அளவிலான கைப்பந்து வீராங்கனையாக இருந்தார்.[11][12]

2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரில் 51.71 எனும் சராசரியில் 362 ஓட்டங்களை எடுத்தார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்கள் எடுத்த போதிலும் அந்தப் போட்டியில் குசராத் அணி தோல்வியடைந்தது. 2023 கவுண்டி வாகையாளர் தொடருக்காக சர்ரே அணியில் விளையாட ஒப்பந்தமானார்.[13]

2024 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளி, சுதர்சன் தனது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக 47.90 சராசரியுடன் 527 ஓட்டங்கள் எடுத்தார். 59வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்தது இவரது குறிப்பிடத்தக்க விளையாட்டு ஆகும். அதில் இவர் 5 முறை 4 ஓட்டங்களையும் மற்றும் 7 முறை 6 ஓட்டங்களையும் அடித்தார். ஜூலை 2024 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடி பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானர்.

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் தற்போது 55வது போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களில் ஒருவராக உள்ளார். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 50.04 சராசரியுடன் 505 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sai Sudharsan". ESPN Cricinfo. Retrieved 4 November 2021.
  2. "Know about Sai Sudarshan, a new cricketing talent from Tamil Nadu on the block". Cric Angel. 20 July 2021. Archived from the original on 6 பெப்ரவரி 2023. Retrieved 4 November 2021.
  3. "TNPL-5: Sai Sudharsan lights up rain-abandoned clash". Times of India. Retrieved 4 November 2021.
  4. "Sudharsan ton helps Rovers bag five points". New Indian Express. Retrieved 4 November 2021.
  5. Penbugs (8 April 2022). "From Triplicane FCC to Gujarat Titans: Sai Sudharsan story". Penbugs (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 ஏப்ரல் 2022. Retrieved 8 April 2022.
  6. "Elite, Group A, Lucknow, Nov 4 2021, Syed Mushtaq Ali Trophy". ESPN Cricinfo. Retrieved 4 November 2021.
  7. "Elite, Group B, Thumba, Dec 8 2021, Vijay Hazare Trophy". ESPN Cricinfo. Retrieved 8 December 2021.
  8. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. Retrieved 13 February 2022.
  9. "Irfan praises Sai Sudharsan for seizing opportunity in Williamson's absence". Crickdom.news. 6 April 2023.
  10. "Who is Sai Sudharsan, and what's his back-story?". ESPN Cricinfo. Retrieved 8 April 2022.
  11. Venugopal, Ashok. "18-year-old Tamil Nadu cricketer has his target set". The New Indian Express. Retrieved 2 May 2022.
  12. ராணி (2024-01-02). "ராகுல் டிராவிடிடம் பாராட்டு பெற்ற சாய் சுதர்சன் யார்?". www.ranionline.com. Retrieved 2024-10-09.
  13. "Surrey sign Sudharsan". Kia Oval. 31 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_சுதர்சன்&oldid=4275620" இலிருந்து மீள்விக்கப்பட்டது