லட்சுமிபதி பாலாஜி
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2008 - 2010 | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
2011 - இன்று | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 9 2011 |
லட்சுமிபதி பாலாஜி (Lakshmipathy Balaji, செப்டம்பர் 27. 1981, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
சர்வதேச கிரிக்கெட்
[தொகு]பாலாஜி 2001 ம் ஆண்டு வரை தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இவர் 2003 ல் இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு உறுப்பினராக இனைந்தார். அவர் 2003ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இந்தியன் பிரீமியர் லீக்
[தொகு]பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் மூன்று இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் விளையாடினார். 10 மே 2008ல், அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 மட்டையாளர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் முதன் முதலாக ஹட்றிக் சாதனை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பாலாஜி 2014 இல் நடைபெற்ற ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
2016ம் ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
.