செப்டம்பர் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2015 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
| MMXV | ||||||
செப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1066 - இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் ஆரம்பமானது.
- 1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான்.
- 1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.
- 1590 - ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.
- 1777 - பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
- 1821 - மெக்சிகோ, எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
- 1854 - "எஸ்.எஸ். ஆர்க்டிக்" நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1893 - சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.
- 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
- 1916 - எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து இயாசு மன்னர் பதவியை இழந்தான்.
- 1928 - ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
- 1937 - கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.
- 1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: வார்சா ஜெர்மனியிடம் சரணடைந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பேர்லின் நகரில் கையெழுத்திட்டன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.
- 1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் ஆப்ட் கொல்லப்பட்டார்.
- 1959 - ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1961 – சியேரா லியோன் ஐநாவில் இணைந்தது.
- 1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
- 1977 - ஒண்டாரியோவில் 300 மீட்டர் உயர தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
- 1983 - இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் சிறை உடைப்பில் பல தமிழ் அரசியல் கைதிகள் தப்பி ஓடினர்.
- 1983 - ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.
- 1994 - மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஓங் சான் சூ கீ உருவாக்கினார்.
- 1993 - அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
- 1996 - ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1997 - செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
- 1998 - கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
- 1998 - கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
- 2002 - கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
பிறப்புக்கள்[தொகு]
- 1696 - அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787)
- 1896 - கில்பர்ட் ஆஷ்டன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1981)
- 1907 - பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931)
- 1925 - ராபர்ட் எட்வர்ட்சு, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2013)
- 1933 - நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)
- 1932 - யஷ் சோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குனர் (இ. 2012)
- 1932 - ஒலிவர் வில்லியம்சன், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1953 - மாதா அம்ருதானந்தமயி, இந்திய ஆன்மிகவாதி
- 1972 - கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை
- 1981 - லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1981 - பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
- 1982 - லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
இறப்புகள்[தொகு]
- 1590 - ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521)
- 1660 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1581)
- 1833 - இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)
- 1972 - சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)
- 1996 - முகமது நஜிபுல்லா, ஆப்கானிய அரசுத்தலைவர் (பி. 1947)
- 2008 - மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)