திருமலை சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமலை சீனிவாசன்
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடை இடதுதிருப்பம்
தரவுகள்
தேர்வுகள்ஒபதுகள்
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் 48 10
துடுப்பாட்ட சராசரி 24.00 5.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் புள்ளி 29 6
பந்துவீச்சுகள்
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் –/– –/–

4 பிப்ரவரி, 2006 தரவுப்படி மூலம்: [1]

திருமலை ஈச்சம்பாடி சீனிவாசன் (பரவலாக டி. ஈ. சீனிவாசன் அக்டோபர் 26, 1950திசம்பர் 6, 2010) தமிழ்நாட்டைச் சேர்ந்த 1980-1981 காலத்தில் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர். சீனிவாசன் சென்னையில் பிறந்தவர். 1977-78 பருவத்தில் துலீப் கோப்பை பந்தயமொன்றில் தென்பிராந்தியத்திற்காக 112 ஓட்டங்கள் எடுத்தபோது தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1980-81 தியோதர் கோப்பை இறுதி ஆட்டத்தில் 129 ஓட்டங்கள் எடுத்தும் இரானி கோப்பை பந்தயதில் தில்லிக்கு எதிராக ஆட்டமிழக்காது சதம் அடித்தும் தமது சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். இதனால் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து பந்தயத் தொடருக்கு தெரிந்தெடுக்கப்பட்டார். ஆயினும் அப்பந்தயத் தொடரில் அவர் ஆடிய இரு ஒருநாள் போட்டிகளிலும் அவரால் ஓர் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை; ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான தேர்வுப் போட்டியிலும் 48 ஓட்டங்களே எடுத்தார்.

தமது அறுபதாவது வயதில் மூளைப் புற்றுநோயால் ஆறு திசம்பர் 2010 அன்று சென்னையில் மரணமடைந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ESPNcricinfo staff (December 6, 2010). "Former India batsman TE Srinivasan dies of brain cancer". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் December 6, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_சீனிவாசன்&oldid=2900605" இருந்து மீள்விக்கப்பட்டது