வாசிங்டன் சுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாசிங்டன் சுந்தர்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வாசிங்டன் சுந்தர்
வகை பன்முகத் திறம்
துடுப்பாட்ட நடை இடது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலது கை சுழற்பந்துவீச்சாளர்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 220) 13 டிசம்பர், 2017: எ [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]]
சட்டை இல. 55
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2016/17–தற்போது வரை தமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2017 ரைசிங் புனே ஜென்ட்சு (squad no. 555)
2018- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (squad no. 555)
அனைத்துலகத் தரவுகள்
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்பன்னாட்டு இருபது20முதல்தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 1 6 12
ஓட்டங்கள் - 532
துடுப்பாட்ட சராசரி - 31.29
100கள்/50கள் –/– -/- 1/2
அதியுயர் புள்ளி - 159
பந்துவீச்சுகள் 60 144 1740
விக்கெட்டுகள் 1 9 30
பந்துவீச்சு சராசரி 65.00 15.11 26.93
5 விக்/இன்னிங்ஸ் 0 0 2
10 விக்/ஆட்டம் n/a n/a 1
சிறந்த பந்துவீச்சு 1/65 3/22 6/87
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– -/- 6/–

14 மார்ச், 2018 தரவுப்படி மூலம்: [Cricinfo profile]

வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும்[1][2] ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் [3]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.[4] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[5] மேலும் அதே அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட் அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாகத் தேர்வானார்.

விளையாடிய அணிகள்[தொகு]

இந்தியத் துடுப்பாட்ட அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு, பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

அக்டோபர் 6, 2016 [6] இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடினார். ரவிச்சந்திரன் அசுவினிற்குப் பிறகு வலது கை சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தில் இருந்து இரண்டாவது வீரராக இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வானார். அக்டோபர், 2017 இல் தனது முதல் தர துடுப்பாட்டத்தில் முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 2017 - 2018 ரஞ்சிக் கோப்பை [7] போட்டியில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். 2016 ஆம் ஆண்டின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வானார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

நவம்பர், 2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடுவதற்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[8] அதனைத் தொடர்ந்து இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி அணியிலும் இவர் இடம்பெற்றார். கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[9] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[10] இவரின் முதன்முறையாக லகிரு திரிமான்னாவினை வீழ்த்தினார்.

மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[11] மிக இளவயதில் இந்திய அணிக்காகப் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது.[12]

மார்ச் 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2018 நிதாகஸ் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். பவர்பிளேயில் சிக்கனமாக பந்துவீசினார். ஓவர்களுக்கு 6 ஓட்டங்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்துள்ளார். ஓட்டங்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். மிக இளம்வயது வீரர் ஒருவரின் சாதனையாக இது கருதப்படுகிறது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. K Chakraborty (6 November 2015). "Tamil Nadu teen makes India U-19 cut - Times of India". பார்த்த நாள் 7 June 2016.
  2. "Washington Sundar". பார்த்த நாள் 7 June 2016.
  3. "தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு". Times of India. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2017.
  4. "Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 October 2016.
  5. "2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017". ESPN Cricinfo (13 December 2017). பார்த்த நாள் 13 December 2017.
  6. "Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 October 2016.
  7. "Washington Sundar's 156* underpins TN's dominance". ESPN Cricinfo. 15 October 2017. http://www.espncricinfo.com/series/8050/report/1118631/day/2/. பார்த்த நாள்: 15 October 2017. 
  8. "Washington Hooda in India's T20 squad". ESPN Cricinfo. பார்த்த நாள் 4 December 2017.
  9. "Washington Sundar replaces injured Jadhav in ODI squad". ESPN Cricinfo (9 December 2017). பார்த்த நாள் 9 December 2017.
  10. "2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017". ESPN Cricinfo (13 December 2017). பார்த்த நாள் 13 December 2017.
  11. "3rd T20I (N), Sri Lanka tour of India at Mumbai, Dec 24 2017". ESPN Cricinfo (24 December 2017). பார்த்த நாள் 13 December 2017.
  12. "Washington Sundar youngest to play for India in T20Is". Times of India. பார்த்த நாள் 24 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிங்டன்_சுந்தர்&oldid=2721085" இருந்து மீள்விக்கப்பட்டது