வருண் சக்கரவர்த்தி
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | வருண் சக்கரவர்த்தி வினோத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 29 ஆகத்து 1991 பீதர், கருநாடகம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | நேர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்துவீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2018–தற்போது வரை | தமிழ்நாடு துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2019 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2020 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக் இன்ஃபோ]], 26 அக்டோபர், 2020 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.[1][2] இவர் பட்டியல் அ போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடினார்.[3] 2018-19 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்ட தொடரில் 9 போட்டியில் 22 இலக்குகளை கைப்பற்றினார்.[4] 2018-2019 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்டத் தொடரில் நவம்பர் 12, 2018 இல் நடைபெற்ற போட்டியில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[5]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இவர், ஆகஸ்ட் 29, 1691 இல் கருநாடகம், பீதரில் வினோத் சக்ரவர்த்தி- மாலினி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இந்தியத் தொலைத்தொடர்புப் பணியாளர் ஆவார். இவரது தந்தை தமிழர்- மலையாளி ஆவார்.[6] இவரது தாய்கன்னடராவார்.[7] இவர் சென்னையில் உள்ள அடையாறில் வளர்ந்தார்.[6]
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]2018 தமிழ்நாடு பிரீமியர் லீக்கில 9 இலக்குகளை வீழ்த்தி மதுரை பாந்தர்சு முதல் முறையாக கோப்பையினை வெல்ல உதவினார்.[8] செப்டம்பர் 20, 2018 இல் 2018–19 விஜய் அசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்ட அணியில் அறிமுகமானார்.[9] 9 போட்டிகளில் 22 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளை வீழ்த்திய தமிழ்நாடு அணி வீர்ரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[10] நவம்பர் 12, 2018 இல் 2018–19 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டிற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[11]
இந்தியன் பிரீமியர் லீக்
[தொகு]டிசம்பர், 2018 இல் நடைபெற்ற 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவரை 8.4 கோடி ரூபாய் மதிப்பில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஏலத்தில் எடுத்தது.[12][13] 2020 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.[14] அக்டோபர் 24, 2020 இல் அபுதாபில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[15]
சர்வதேச போட்டிகள்
[தொகு]அக்டோபர் 26,2020 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.[16] காயம் காரணமாக 2020 நவம்பர் 20 இல் அணியில் இருந்து விலகினார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்திற்கான ப இ20 அணியில் இடம் பெற்றார்.[17]
சூன் 2021 இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் ப இ20 தொடரில் இடம் பெற்றார்.[18] இலங்கை அணிக்கு எதிராக 2021 சூலை 21 இல் பனாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமாகி [19] தசுன் சானக்கவின் இலக்கினைக் கைப்பற்றினார்.[20] செப்டம்பர் 2021 இல் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[21] மூன்று போட்டிகளில் விளையாடினாலும் இலக்குகளைக் கைப்பற்றாவில்லை.[22]
சான்றுகள்
[தொகு]- ↑ "Varun Chakravarthy". ESPN Cricinfo. Retrieved 20 September 2018.
- ↑ "Decoding the mystery: Who is Varun Chakravarthy?". ESPN Cricinfo. Retrieved 18 December 2018.
- ↑ "Elite, Group C, Vijay Hazare Trophy at Chennai, Sep 20 2018". ESPN Cricinfo. Retrieved 20 September 2018.
- ↑ "Vijay Hazare Trophy, 2016/17 - Tamil Nadu: Batting and bowling averages". ESPN Cricinfo. Retrieved 11 October 2018.
- ↑ "Elite, Group B, Ranji Trophy at Tirunelveli, Nov 12-15 2018". ESPN Cricinfo. Retrieved 12 November 2018.
- ↑ 6.0 6.1 Nair, Aneesh (10 December 2020). "Mystery spinner Varun Chakravarthy and his Kerala connection" (in en). Manorama Online. https://www.onmanorama.com/sports/cricket/2020/10/28/ipl-2020-varun-chakravarthy-kkr-myster-spinner-kerala-connection.html.
- ↑ "Basu Shanker | Varun Chakravarthy | Mystery Spinner | Cricket | Interview | Time Out with Basu | E15". 17 September 2022. Event occurs between 2:20 and 2:46. Archived from the original on 3 March 2025. Retrieved 3 March 2025.
- ↑ .
- ↑ "Elite, Group C, Vijay Hazare Trophy at Chennai, Sep 20 2018". ESPNcricinfo. Retrieved 20 September 2018.
- ↑ "Vijay Hazare Trophy, 2016/17 - Tamil Nadu: Batting and bowling averages". ESPNcricinfo. Archived from the original on 11 October 2018. Retrieved 11 October 2018.
- ↑ "Elite, Group B, Ranji Trophy at Tirunelveli, Nov 12-15 2018". ESPNcricinfo. Retrieved 12 November 2018.
- ↑ "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. Retrieved 18 December 2018.
- ↑ "IPL 2019 Auction: Who got whom". The Times of India. Retrieved 18 December 2018.
- ↑ "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPN Cricinfo. 20 December 2019. Retrieved 20 December 2019.
- ↑ "Varun Chakravarthy took his first five-wicket haul". scroll.in. Retrieved 24 October 2020.
- ↑ "Rishabh Pant omitted from India's white-ball squads, Varun Chakravarthy in T20I squad". ESPN Cricinfo. Retrieved 26 October 2020.
- ↑ "India's squad for Paytm T20I series announced". Board of Control for Cricket in India. Archived from the original on 9 December 2023. Retrieved 19 February 2021.
- ↑ "Shikhar Dhawan to captain India on limited-overs tour of Sri Lanka". ESPNcricinfo. 10 June 2021. Archived from the original on 10 June 2021. Retrieved 10 June 2021.
- ↑ "1st T20I (N), Colombo (RPS), Jul 25 2021, India tour of Sri Lanka". ESPNcricinfo. Retrieved 25 July 2021.
- ↑
{{cite web}}: Empty citation (help) - ↑ "India's T20 World Cup squad: R Ashwin picked, MS Dhoni mentor". ESPNcricinfo. 8 September 2021. Archived from the original on 8 September 2021. Retrieved 8 September 2021.
- ↑ "Cracks to craftsmanship: Varun Chakravarthy redesigns his Dubai story". India Today (in Indian English). 3 March 2025.
வெளியிணைப்புகள்
[தொகு]கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: வருண் சக்கரவர்த்தி