ரவிச்சந்திரன் அசுவின்
![]() ஜூன் 2014இல் அஷ்வின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 17 செப்டம்பர் 1986 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | அஷ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.83 m (6 ft 0 in) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை எதிர் விலகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வலைத்தளம் | rashwin | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 271) | 6 நவம்பர் 2011 எ மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 பெப்ரவரி 2021 எ இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 185) | 5 ஜூன் 2010 எ இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 30 ஜூன் 2017 எ மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 99 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 30) | 12 ஜூன் 2010 எ சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 9 ஜூலை 2017 எ மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006/07–தற்போது | தமிழ்நாடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2015 | சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 99) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 99) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | வொர்கெஸ்டர்ஷைர் (squad no. 99) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–2019 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 99) (formerly 23) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | நொட்டிங்காம்ஷைர் (squad no. 99) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020- | டெல்லி கேபிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 26 பெப்ரவரி 2021 |
ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin,ஒலிப்பு (உதவி·தகவல்) பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விளையாடினார். ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு தற்போது (2018) இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியின் தலைவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேகமாக 50-, 100-, 150-, 200-, 250 மற்றும் 300- இலக்குகளைப் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார். இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஆனார்.[1][2]
இளையோர் வயது துடுப்பாட்டப் போட்டிகளில் துவக்க மட்டையாளராகக் களமிறங்கினார். அதன் பின்பு வலது கை சுழற்பந்து வீச்சாளரானார். 2006 ஆம் ஆண்டில் தமிழக அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். பிறகு அந்த அணிக்குத் தலைமை தாங்கினார். பின் 2010 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் இவரின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தத் தொடரில் இவர் சிக்கனமாகப் பந்து வீசினார். 2010 ஆம் ஆண்டின் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 வாகையாளர் போட்டியில் அதிக இலக்குகள் எடுத்தவர் மற்றும் தொடர் நாயகன் விருதினையும் வென்றார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே 5 இலக்குகளைப் பெற்றார். அறிமுகப் போட்டியில் 5 இலக்குகள் பெறும் ஏழாவது இந்திய வீரரானார். மேலும் நூறு ரன்கள் அடித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.
துணைக்கண்டங்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய போதும் ஆத்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அயல்நாடுகளில் சிறப்பாக செயல்படவில்லை. 2013 ஆம் ஆண்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது 29 இலக்குகள் எடுத்தார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச இலக்குகள் இதுவாகும். தனது பதினெட்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 இலக்குகள் பெற்றார். 80 ஆண்டுகால தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் குறைவான போட்டிகளில் 100 இலக்குகள் பெற்ற முதல் சர்வதேச மற்றும் இந்திய வீரர் எனும் சாதனையப் படைத்தார். 2017 ஆம் ஆண்டில் 45 ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய போது 250 இலக்குகள் எடுத்தார். இதன்மூலம் குறைவான போட்டிகளில் 250 இலக்குகள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பாக டென்னிஸ் லில்லீ என்பவர் 48 போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.[3]
பிறப்பு[தொகு]
இவர் செப்டம்பர் 17, 1986 இல் சென்னையில் பிறந்தார். இவரின் பெற்றோர் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு, பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[4]
ஆட்ட வாழ்வு[தொகு]
தமிழ்நாடு துடுப்பாட்ட அணியின் பன்முக துடுப்பாட்டக்காரரான அஸ்வின் முதல்தர துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சு புள்ளிகளாக 6/64 எடுத்துள்ளார். இருபது20 துடுப்பாட்டத்தில் ஆந்திராவிற்கு எதிராக தமது ஆட்டத்தைத் துவங்கினார். தகவல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்ப பட்டம் (பி.டெக்) பெற்றுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல இவரது 3/16 (4 பந்து பரிமாற்றங்கள்) பெரிதும் உதவ, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஒருநாள் துடுப்பாட்டத்தில் சூன் 5, 2010 அன்று இலங்கையுடன் தமது ஆட்டவாழ்வைத் துவங்கினார். அஸ்வின் 32 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தும் அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது.
2010 சாம்பியன்ஸ் லீக் இருபது20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி மிக கூடுதலான விக்கெட்களை வீழ்த்தினார்; 13 விக்கெட்களை பெற்றதற்காக போட்டியின் சிறந்த துடுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கோல்டன் விக்கெட் பரிசும் பெற்றார்.
மேற்கிந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் ஆறு - 10, 2011.) ஒன்பது விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் (நவம்பர் 25, 2011.) அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்பு வினோ மன்கட், பாலி உம்ரிகர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 1952ல் மங்கட்டும், 1962ம் ஆண்டு உம்ரிகரும் இந்த சாதனையைச் செய்தனர்.
புள்ளி விவரம்[தொகு]
மட்டையாளராக[தொகு]
ரவிச்சந்திரன் அசுவின் தேர்வுத்துடுப்பாட்டத்தில் நூறு எடுத்த போட்டிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வ. எ | ஓட்டங்கள் | போட்டிகள் | எதிரணி | நகரம்/நாடு | இடம் | ஆண்டு | முடிவு |
1 | 103 | 3 | ![]() |
![]() |
வான்கடே மைதானம் | 2011 | டிராவில் முடிந்தது |
2 | 124 | 17 | ![]() |
![]() |
ஈடன் கார்டன்ஸ் | 2013 | வெற்றி |
3 | 113 | 33 | ![]() |
![]() |
விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் | 2016 | வெற்றி |
4 | 118 | 35 | ![]() |
![]() |
டேரன் சமி துடுப்பாட்ட அரங்கம் | 2016 | வெற்றி |
பந்துவீச்சு[தொகு]
வ. எ | எண் | போட்டி | எதிரணி | இடம் | நகரம் | ஆண்டு | முடிவு |
---|---|---|---|---|---|---|---|
1 | 12/85 | 7 | ![]() |
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் | ஐதராபாத்து (இந்தியா) | 2012 | வெற்றி |
2 | 12/198 | 13 | ![]() |
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | சென்னை | 2013 | வெற்றி |
3 | 10/160 | 26 | ![]() |
காலி பன்னாட்டு அரங்கம் | காலி | 2015 | தோல்வி |
4 | 12/98 | 31 | ![]() |
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் | நாக்பூர் | 2015 | வெற்றி |
5 | 10/225 | 37 | ![]() |
கிரீன் பார்க் அரங்கம் | கான்பூர் | 2016 | வெற்றி |
6 | 13/140 | 39 | ![]() |
ஹோல்கர் அரங்கம் | இந்தோர் | 2016 | வெற்றி |
7 | 12/167 | 43 | ![]() |
வான்கேடே அரங்கம் | மும்பை | 2016 | வெற்றி |
விருது[தொகு]
- 2012-13 ஆண்டுக்கான பிசிசிஐயின், பாலி உம்ரிகர் விருதுக்கு (சிறந்த அனைத்துலக வீரர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்[5].
- 2014 - அர்ஜுனா விருது[6].
- 2016 - ஐசிசி தொடர் ஆட்டக்காரர் விருது[7]
- 2016 - சர் கார்பீல்டு சொபர்ஸ் விருது[8]
- 2016 - ஆனந்த விகடன் "டாப் 10" மனிதர்கள் விருது[9]
துடுப்பாட்ட சாதனை[தொகு]
- 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) 2வது அதிவேக 200 இலக்குகள்(விக்கேட்). இச்சாதனை 37 போட்டிகளில் செய்தார்.[சான்று தேவை]
- 5 நாள் போட்டிகளில் 6 முறை தொடர் நாயகனாக சாதனை செய்தார்.[சான்று தேவை]
வெளி விவரங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "R Ashwin second-fastest to 200 Test wickets". ESPNcricinfo. 25 September 2016. 25 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Records / Test matches / Bowling records / Fastest to 50 wickets". ESPNcricinfo. 2 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "India v Bangladesh: R Ashwin becomes fastest to 250 Test wickets". The Times of India. 12 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Express Publications Dinamani-Nagapattinam epaper dated Fri, 22 Jun 18, 2018-06-22 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "Ashwin Award 2013". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Arjuna Award: All-Rounder Ravichandran Ashwin to be Honoured". 2014-08-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://sports.ndtv.com/cricket/icc-awards-ravichandran-ashwin-named-test-cricketer-of-the-year-2016-and-also-cricketer-of-the-year-1640643?pfrom=home-lateststories
- ↑ https://sports.ndtv.com/cricket/icc-awards-ravichandran-ashwin-named-test-cricketer-of-the-year-2016-and-also-cricketer-of-the-year-1640643?pfrom=home-lateststories ICC Awards: Ravichandran Ashwin Named Test Cricketer Of The Year 2016 And Also Cricketer Of The Year
- ↑ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017