சாருக் கான் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாருக்கான்
Shahrukh Khan (cricketer)
209-20 விஜய் அசாரே கிண்ணத் தொடரில் கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மசூத் சாருக் கான்[1]
பிறப்பு27 மே 1995 (1995-05-27) (அகவை 28)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைமட்டையாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை சுழற்பந்து
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–தற்போது வரைதமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2021பஞ்சாப் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 231
மட்டையாட்ட சராசரி 33.00
100கள்/50கள் 0/2
அதியுயர் ஓட்டம் 92*
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/–
மூலம்: Cricinfo, சனவரி 30, 2022

சாருக் கான் (Shahrukh Khan (cricketer)) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்டக்காரர் ஆவார்.[2] 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் பஞ்சாப் கிங்சு அணிக்காகவும் இவர் விளையாடுகிறார்.

தொழில்[தொகு]

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று சாருக் கான் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இப்போட்டி 2013-14 ஆண்டுக்கான விஜய் அசாரே கிண்ணப் போட்டியாகும். தமிழ்நாட்டிற்காக இவர் இப்போட்டியில் விளையாடினார்.[3] 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று 2018-19 ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற இரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார் [4].

2021 ஆண்டு நடைபெற்ற சையது முசுட்டாக் அலி கிண்ணத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கிண்ணத்தினை வென்ற தமிழ்நாடு அணியில் சாருக் கான் இடம் பெற்றிருந்தார். இமாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் கான் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்கள் எடுத்தார்.[5] [6]

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 2021 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக நடந்த ஐபிஎல் ஏலத்தில் கான் பஞ்சாப் கிங்சு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[7] 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று இராசத்தான் ராயல்சுக்கு எதிராக அறிமுகமாகி 4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்கள் எடுத்தார். இவருக்கான முதல் ஐபிஎல் தொப்பியை கிறிசு கெயில் வழங்கினார்.[8]

2022 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டிக்கான அணியில் இரண்டு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக கானின் பெயர் சேர்க்கப்பட்டது.[9] 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்காக பஞ்சாப் கிங்சு அணி இவரை ஏலத்தில் வாங்கியது.[10] பின்னர் நடைபெற்ற இரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய சாருக் கான் தில்லி அணிக்கு எதிரான போட்டியில் 194 ஓட்டங்கள் எடுத்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Venugopal, Arun (15 May 2013). "Trying to make a name". தி இந்து.
  2. "Shahrukh Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  3. "South Zone, Alur, Feb 27 2014, Vijay Hazare Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 November 2020.
  4. "Elite, Group B, Ranji Trophy at Chennai, Dec 6-9 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  5. "Full Scorecard of H. Pradesh vs Tamil Nadu 2nd quarter final 2020/21 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 March 2021.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
  8. "IPL 2021: Shahrukh Khan age, height, hometown, IPL Salary and T20 stats". www.sportskeeda.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
  9. "Shahrukh Khan, Sai Kishore part of India's stand-bys for West Indies T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  10. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
  11. "Shahrukh Khan wallops 194 to light up Tamil Nadu's opening Ranji match". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.

புற இணைப்புகள்[தொகு]