நீலாங்கரை
| நீலாங்கரை | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| வட்டம் | சோழிங்கநல்லூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 15,688 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நீலாங்கரை (ஆங்கிலம்:Neelankarai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நீலாங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலாங்கரை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நீலாங்கரை பெயர் காரணம்
[தொகு]திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதியை ஒட்டியுள்ள பகுதிதான் இந்த நீலாங்கரை. நீலாங்கரை கிழக்கு கடற்கரை இங்கு தான் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் இங்கு அதிகமாக அமைந்துள்ளது. மக்கள் அதிகமாகவும், மீன்பிடித் தொழில் அதிகமாக நடைபெறும் பகுதியாக அமைந்துள்ளன. மிகவும் எழில் மிகுந்த கடற்கரையாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வரும் பகுதி இந்த நீலாங்கரை. மிகவும் நீளமான கடற்கரை அமைந்துள்ள காரணத்தினாலேயே இப்பகுதி நீலாங்கரை என அழைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/Apr/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-336401.html. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)