இசுடான்லி மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
வகைபொது; மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
உருவாக்கம்1938
துறைத்தலைவர்மரு.R.சாந்தி மலர் M.D., D.A.,
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி .ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (Stanley Medical College) தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 200 ஆண்டுகளுக்கு முன்பே (1740ல்) இவ்வமைப்பு உருவாக்கப்பட்டாலும் கல்லூரியாக உருவாக்கப்பட்டது 1938ல் தான். என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தின் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 இல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.

ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது 1933 இல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனை என 1936 சூலை 2 இல் மாற்றப்பட்டது. 1938 இல் அங்கு 72 மாணவர்கள் படித்தனர். அந்த எண்ணிக்கை 1963 இல் 150 ஆக உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டில் 250 மாணவர்கள் பயில்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முகமது ஹுசைன் (2018 ஏப்ரல் 14). "அன்று அன்னச் சத்திரம் இன்று மருத்துவமனை". கட்டுரை. தி இந்து தமிழ். 16 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)