திருவான்மியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவான்மியூர் (ஆங்கில மொழி: Thiruvanmiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் அமைந்துள்ள ஒரு சுற்றுப்புறப் பகுதியாகும். சென்னையின் தெற்கு பகுதியில் பெரும்பாலும் மக்கள் வசிக்கும் பகுதியாக இது உள்ளது. சென்னையின் முதல் அர்ப்பணிப்பு தொழில்நுட்ப அலுவலக இடமான டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அருகிலுள்ள தரமணியில் நிர்மாணித்ததன் மூலமாக திருவான்மியூர் அதன் பொருளாதார நிலையில் ஓர் ஏற்றத்தைக் கண்டது. டைடல் தொழில்நுட்ப பூங்காவைச் சுற்றியுள்ள பல தகவல் தொழில்நுட்ப வணிகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அலுவலகங்களின் அடுத்தடுத்த எழுச்சி திருவான்மியூருக்கு தற்செயலாக மேலும் நற்பேறைக் கொடுத்தது. ஏனெனில் இந்த அலுவலகங்களில் உள்ள பல தொழிலாளர்கள் பெரும்பாலும் திருவான்மியூரை தங்கள் இல்லமாக மாற்றினர். சங்க தமிழ் காவியங்களில் குறிப்பிடப்பட்ட சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மருண்டீசுவரர் கோயில் இப்பகுதியை முன்பு வரையறுத்தது. இந்தியக் கலாச்சாரம் மற்றும் நுண்கலைகளின் பாதுகாப்பு, கற்பித்தல் மற்றும் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கலாசேத்ரா கலாச்சார அகாடமி திருவான்மியூரில் அமைந்துள்ளது. பொதுவாக இப்பகுதி சென்னை நகரத்தின் மைக்கோ தளவமைப்பு திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

  • திரு- வால்மீகி – ஊர் என்ற சொற்களில் வால்மீகியின் கோயில் அமைந்துள்ள இடம் திருவான்மியூர் என்ற பெயரைப் பெற்றது.[1]
  • தமிழ் இலக்கியத்தின் சங்க இலக்கியத்தில் திரு-ஆமை-யூர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் இப்பகுதி ஆமைகளின் நகரம் என்று பொருளைக் கூறுகிறது. நினைவுக்கெட்டாத பழங்காலந்தொட்டு இந்த நகரத்தின் கடற்கரை ஒரு முக்கியமான ஆமை வாழ்விடமாக இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. பைந்தமிழ் பாரதம் வாழ் சித்தர் வால்மிகி தமிழகத்தில் இந்த இடத்தில் தான் ஈசன் மாருதீஸ்வரர் அருளால் ஶ்ரீமத் இராமாயணம் எழுதினார்.

சாலையும் போக்குவரத்தும்[தொகு]

பெருநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் இப்பகுதியை எளிதில் அணுகலாம். இப்பகுதி பரந்த பேருந்து முனையத்தைக் கொண்டுள்ளது. செயந்தி திரையரங்கு, திருவான்மியூர் பேருந்து நிலையம், மருண்டீசுவர்ர் கோயில், வட்டார போக்குவரத்து அலுவலகம், டைடல் பூங்கா ஆகிய பேருந்து நிறுத்தங்கள் இப்பகுதியில் உள்ளன. பாண்டிச்சேரியை நோக்கிச் செல்லும் விரைவுப் பேருந்துகள் இந்தப் பகுதி வழியாகச் செல்கின்றன. அவை நின்று செல்லவும் இங்கு ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. டைடல் பூங்காவிற்கு எதிரே திருவான்மியூர் இரயில் நிலையம் உள்ளது. சென்னை பூங்கா இரயில் நிலையம் வழியாக வேளச்சேரி, கடற்கரை இரயில் நிலையங்கள் இணைக்கப்படுள்ளன. டைடல் பூங்காவிற்கு அருகில் இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் பல இடம்பெற்றுள்ளன. இப்பகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மற்றொரு முக்கிய மையமாகும். திருவான்மியூரில் புறப்படும் கிழக்கு கடற்கரைச் சாலை மகாபலிபுரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் செல்கிறது.

வசதிகள்[தொகு]

பழைய மகாபலிபுரம் சாலையைச் சந்திப்பதற்கு 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாக லாட்டிசு பாலத்திற்கு கிழக்கில் பிரதான அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. இரண்டு முக்கியமான திரையரங்குகள் இங்கு இருந்தன. தற்போது வீட்டுவசதி வாரியத் திட்ட்த்திற்காக ஒரு திரையரங்கு இடிக்கப்பட்டுவிட்டது. தென் சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகமும் இப்பகுதியின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

திருவான்மியூர் கடற்கரை ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு பகுதியாகும். மேலும் கடற்கரை பாதையானது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. உள்ளூர் கடற்கரை நடையாளர்களுக்கு இச்சாலை மிகவும் பிரபலமானதாகும். உள்ளூர் சமூகத்தின் ஆரோக்கியமான ஆதரவோடு இந்த கடற்கரை நன்கு பராமரிக்கப்படுகிறது. வயதில் மூத்த நடைப் பயணிகள் ஓய்வெடுக்க ஏ.பி.ஜே அப்துல் கலாம் பருத்திவீடு என்ற வீட்டை இச்சமூகம் உருவாக்கியுள்ளது. குழந்தைகள் கால்பந்து, கைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதற்கான ஆரோக்கியமான விளையாட்டு மைதானத்தையும் இப்பகுதி வழங்குகிறது. புகழ்பெற்ற ஆர்கானிக் கடைகள் தரமான ஸ்டாண்டர்ட் கோல்டு ப்ரெஸ்ஸட் ஆயில் மற்றும் ஜெயலட்சுமி நட்டு மருந்து கடை இங்கே உள்ளது.

மாநில கல்வித்திட்டத்தில் இயங்கும் பல பள்ளிகளும், மத்திய கல்வித்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் பலவும் இங்குள்ளன. திருவான்மியூர் சென்னை நகரத்தின் ஒரு முக்கியமான இடமாகும், ஏனெனில் இப்பகுதி மற்ற இடங்களுடன் எளிதில் பேருந்து வசதியால் இணைப்பு கொண்டுள்ளது. முன்னணி உணவு விற்பனை நிலையங்களான கே.எஃப்.சி, தோமினோசு, பீசா அட் உட்பட மேலும் பல முன்னணி நிறுவன்ங்கள் தங்கள் விற்பனை நிலையங்களை இங்கு அமைத்துள்ளன.

அமைவிடம்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arulmigu Marundeeswarar Temple Thiruvanmiyur, Chennai". Archived from the original on 2015-04-10.

புறஇணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவான்மியூர்&oldid=3632017" இலிருந்து மீள்விக்கப்பட்டது