பட்டரவாக்கம்
Appearance
பட்டரவாக்கம் (Pattaravakkam) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வடமேற்கே அமைந்த சென்னை புறநகர் பகுதியாகும். இது சென்னை மாவட்டத்தில் உள்ள அமபத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் இது அம்பத்தூர் நகராட்சிப் பகுதியாக இருந்தது. தற்போது இது சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர்மண்டல எண் 7-இல் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதி, சென்னை-மும்பை செல்லும் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இங்கு பட்டரவாக்கம் புறநகர் இரயில் நிலையம் உள்ளது.