விருகம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விருகம்பாக்கம் (Virugambakkam) இந்திய மாநகரம் சென்னையில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும்.இப்பகுதியில் சிறந்த பள்ளிகள், சந்தைகள், திரைப்படக் கலைஞர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சென்னையின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய திரைபிடிப்புத் தளங்கள் உள்ளன. விடுதலைக்குப் பின்னர் இப்பகுதி வேகமாக வளர்ந்தது. 1970களில் இது சென்னை மாநகரத்தில் சேர்க்கப்பட்டது. இங்கு கிடைக்கும் தூய நிலத்தடி நீருக்காக பலர் குடிபெயர்ந்தனர். சென்னையில் ஆவடி தவிர்த்து இங்குதான் இயற்கை வாயு கிடைக்கிறது[1].

இருப்பிடம்[தொகு]

விருகம்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.கிழக்கில் வடபழநி, வடக்கில் கோயம்பேடு, தென் மேற்கு மற்றும் மேற்கில் ஆழ்வார் திருநகர், தென்கிழக்கில் கே கே நகர் ஆகிய சுற்றுப்பகுதிகள் அமைந்துள்ளன. இதன் மேற்கு எல்லை சென்னை மாநகராட்சியின் எல்லையாகவும் விளங்குகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Geo Abstracts. University of East Anglia. 1966. பக். 494. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருகம்பாக்கம்&oldid=1985170" இருந்து மீள்விக்கப்பட்டது