உள்ளடக்கத்துக்குச் செல்

பூவிருந்தவல்லி

ஆள்கூறுகள்: 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E / 13.047300; 80.094500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூந்தமல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூவிருந்தவல்லி

பூந்தமல்லி

—  தேர்வு நிலை நகராட்சி  —
பூவிருந்தவல்லி
அமைவிடம்: பூவிருந்தவல்லி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E / 13.047300; 80.094500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பூந்தமல்லி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 6,59,922 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 அடி)

குறியீடுகள்


பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூந்தமல்லி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வு நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியானது 2024 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு. பூந்தமல்லி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியானது திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[5]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஆவடி மாநகராட்சியுடன் இணையும் 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்
  5. "திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  6. "Poonamallee". Falling Rain Genomics, Inc. Retrieved 20 அக்டோபர் 2006.
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved 20 அக்டோபர் 2006.

மேலும் பார்க்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poonamallee
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிருந்தவல்லி&oldid=4379088" இலிருந்து மீள்விக்கப்பட்டது