ஆதம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதம்பாக்கம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் வட்டத்தின் ஒரு வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கம் பிருந்தாவனம் நகர் முதன்மைச் சாலை

அமைவு[தொகு]

சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. ஆதம்பக்கத்தைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், கிண்டி, நங்கநல்லூர், வானுவம்பேட்டை, பழவந்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகும். ஆதம்பாக்கம், பரங்கி மலை ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. வேளச்சேரி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி புனித தோமையர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இதன் சுற்று வாட்டர பகுதிகளாக புனித தோமையர் மலை, கிண்டி, வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கைநல்லூர் மற்றும் பழவந்தாங்கள் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கிருந்து ரயில் மார்கமாகவும் பேருந்து மார்கமாகவும் பயணிக்க ஏதுவான பகுதி. பல புகழ் பெற்ற கோயில்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், மற்றும் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளன.

நெடுஞ்சாலைகள்[தொகு]

தெற்கு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆதம்பக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.

அஞ்சல் குறியீட்டு எண்[தொகு]

ஆதம்பாக்கத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600088.

பள்ளிக்கூடங்கள்[தொகு]

ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன

 • தூய. மார்க்ஸ் நடுப்பள்ளி
 • G.K. ஷெட்டி இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி
 • வியாச வித்யாலயா மெட்ரிக் மற்றும் உயர்நிலைப் பள்ளி
 • டி.ஏ.வி. பள்ளி
 • தூய. பிரித்தொவின் அகாடெமி
 • இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி
 • லிட்டில் பிளவர் பள்ளி
 • யூனிட்டி பொதுப் பள்ளி
 • புதிய பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி
 • ரோசரி மெட்ரிக் பள்ளி

மருத்துவமனைகள்[தொகு]

ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன

1) ஜெயலக்ஷ்மி அரசு மருத்துவமனை

2) S. P. மருத்துவமனை

3) G. R. மருத்துவமனை

4) பொன்மாளிகை மருத்துவமனை

கடைவீதி[தொகு]

கருணீகர் தெரு கடைவீதி

ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கருணீகர் தெரு உள்ளபடி அப்பகுதியின் பெரிய கடைவீதியாக கருதப்படுகிறது.


வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

கோயில்கள்[தொகு]

 • நாகமுத்து மாரியம்மன் கோவில்
 • புவனேஸ்வரி அம்மன் கோவில்
 • பழாண்டி அம்மன் கோவில்
 • ஐயப்பன் கோவில்
 • பாப்பாத்தி கருமாரியம்மன் ஆலயம் டாக்டர் அம்பேத்கர் நகர் (குயில் குப்பம்)


தேவாலயங்கள்[தொகு]

 • புனித மார்க் தேவாலயம்

பள்ளிவாசல்கள்[தொகு]

 • மஸ்ஜித் தபாரக்
 • மஸ்ஜித் முபாரக்

அமைவிடம்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதம்பாக்கம்&oldid=3141089" இருந்து மீள்விக்கப்பட்டது