இராமாபுரம், சென்னை
இராமாபுரம்
இராமாவரம் | |
|---|---|
L&T Infotech, on மவுண்ட்-பூந்தமல்லி சாலை, இராமாபுரம் | |
| ஆள்கூறுகள்: 13°00′38″N 80°11′35″E / 13.010600°N 80.193180°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| பெருநகரம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
| அரசு | |
| • வகை | Ward attached to the Corporation of Chennai |
| ஏற்றம் | 42 m (138 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | TN 10 |
இராமாபுரம் அல்லது இராமாவரம் (ஆங்கிலம்: Ramapuram) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தின் தென்மேற்கில் அமைந்த பகுதியாகும். பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் அமைந்த இராமாபுரம் கிண்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டதிற்குட்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 42 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராமாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°00′38″N 80°11′35″E / 13.010600°N 80.193180°E ஆகும்.
அருகமைந்த தொடருந்து நிலையம்
[தொகு]கிண்டி (5 km)
- கிண்டி தொடருந்து நிலையத்திலிருந்து இராமாபுரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் உண்டு.
சிறப்புகள்
[தொகு]தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் வாழ்ந்த வீடு ராமபுரம் பகுதியில் உள்ளது. எம்ஜிஆரின் உயிலின்படி அவரது வீடு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியாக மாற்றப்பட்டது[1]. தற்பொழுது எம். ஜி. ஆர் கார்டன் (தோட்டம் ) என வழங்கப்படுகிறது. ராமபுரம் 1000 வருட பழைமையான லட்சுமி நரசிம்மா பெருமாள் கோவிலுக்கும், 100 வருட பழைமையான அரசமர கோவிலுக்கும் பெருமை பெற்றது.[சான்று தேவை]