சென்னைப் புறநகரக் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னைப் புறநகரக் காவல்
[[Image:ChennaiPoliceLogo.gif |center |220x140px]]
Logo of the சென்னைப் புறநகரக் காவல்.
Motto வாய்மையே வெல்லும்
Agency overview
Legal personality Governmental: Government agency
அதிகார வரம்பு முறைமை
General nature
செயல்பாட்டு முறைமை


சென்னைப் புறநகரக் காவல் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் சென்னை மாவட்டத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் பாதுகாக்கும் பணிக்காக ஜூலை 23, 2008[1] ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (புதன்கிழமை) ஆணையரகத்தினிலிருந்து பிரிந்து தனித்த ஆணையரகமாக சென்னைப் புறநகர் ஆணையரகத்தின் கீழ் இயங்குகின்றது.

இந்த ஆணையரகம் (செயின்ட் தாமஸ் மவுண்ட்) புனித தாமஸ் மவுண்ட்டைத் தலைமையகமாகக் கொண்டு அதனடுத்து வரும் இரண்டு காவல்துறை மாவட்டங்களாக மாதவரம் [1]மற்றும் அம்பத்தூர் ஆகிய மூன்று காவல்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய ஆணையரகமாக செயல்படுகின்றது.

இதன் கீழ் 39 காவல் நிலையங்களும், 8 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும்[1] செயல்படுகின்றன.

இந்த ஆணையரகத்துக்குத் துணை புரிபவர்களாக இரு துணை ஆணையர்கள், 14 உதவி ஆணையர்கள், 36 ஆய்வாளர்கள், 42 உதவி ஆய்வாளர்கள் (துணை ஆய்வாளர்கள்) மற்றும் பிற படிநிலையில் உள்ளவர்கள் 287 பேர்களும் அடங்குவர்.

இந்த ஆணையரகத்தின் முதல் ஆணையராக[1] திரு எஸ்.ஆர். ஜாங்கிட் ஆணையரகம் துவங்கியது முதல் (சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையராகப் பணி புரிந்தவர்)[1] தற்பொழுது வரை பொறுப்பு வகித்து வருகின்றார்.

புதிய ஆணையரகம் உருவாகியதின் பின்னணி[தொகு]

செங்கை கிழக்கு மாவட்டத்தின் 41 நிலையங்கள் சென்னை மாநகரக் காவல் துறையோடு ஏற்கனவே இணைக்கப்பெற்றதினால், சென்னை காவல் துறைக்கு கூடுதல் சுமையானதின் காரணமாகவும், எதிர்பார்த்த பலன் கிட்டாததினாலும் இப்புதிய ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இவ்வாணைய நிர்மாணிப்பிற்காகவும், கூடுதல் மனிதத்திறனைப் பயன்படுத்துவதற்காகவும் அரசு 8.44 கோடி ரூபாய்[1] ஒதுக்கியது.

காவல்நிலையங்கள்[தொகு]

சென்னைப் புறநகரக் காவல் துறையில் அடங்கிய நிலையங்கள்[1]
வ.எண் நிலையங்கள் வ.எ.தொ நி.தொ
1 செயின்ட் தாமஸ் மவுண்ட் 21 அம்பத்தூர் தொழிற்பேட்டை
2 மீனம்பாக்கம் 22 கொரட்டூர்
3 பல்லாவரம் 23 மதுரவாயல்
4 குரோம்பேட்டை 24 ஆவடி
5 சங்கர் நகர் 25 ஆவடி கனரகத் தொழிற்சாலை
6 தாம்பரம் 26 பட்டாபிராம்
7 மடிப்பாக்கம் 27 முத்தபுதுபேட்டை
8 பழவந்தாங்கல் 28 திருநின்றவூர்
9 ஆதம்பாக்கம் 29 நசரத்பேட்டை
10 பள்ளிக்கரணை 30 திருமுல்லைவாயில்
11 சிட்லபாக்கம் 31 திருவேற்காடு
12 பீர்க்கன்கரணை 32 மாதவரம்
13 சேலையூர் 33 மாதவரம் பால் பண்ணை
14 வானூர்தி நிலையம்
(விமான நிலையம்)
34 செங்குன்றம்
15 நந்தம்பாக்கம் 35 எண்ணூர்
16 பூவிருந்தவல்லி
(பூந்தமல்லி)
36 மணலி
17 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்
கல்லூரி மருத்துவமனை
37 மணலி புதுநகர்
18 குன்றத்தூர் 38 சாத்தாங்காடு
19 மாங்காடு 39 புழல்
20 அம்பத்தூர்

வெளி இணைப்புக்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 இந்து நாளிதழ் செய்தி (23-7-2008)இணையம்பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 05-05-2009