திருநின்றவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்னும் ஊர் பற்றியது. திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் பற்றி அறிய, திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் என்பதைப் பாருங்கள்.
திருநின்றவூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 29 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

திருநின்றவூர் (ஆங்கிலம்:Thirunindravur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரில் வடமேற்கில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இது சென்னையில் இருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது . திருநின்றவூர் சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,395 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருநின்றவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநின்றவூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோவில்கள்[தொகு]

திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இதைத் தவிர, இங்கு திரு இரித்யாலீசுவரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்றும் நன்றாக பராமரிக்கபட்டு வருகிறது. இந்த கோவில்கள் பல்லவர் காலத்தில் கட்டபட்டது. திருநின்றவூர் ஏரி மிகவும் பெரியதாகும். திரு ஏரி காத்த ராமர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. முற்காலத்தில் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அருகில் திருமழிசை ஜெகனாநாத சுவாமி திருத்தலம் அமைந்துள்ளது.

பேருந்து வசதி[தொகு]

சென்னை மாநகர பேருந்துகளின் விவரம்:

 1. M54A --> பூவிருந்தவல்லி - திருநின்றவூர்
 2. 65C --> அம்பத்தூர் தொழிற்பேட்டை - பாக்கம், வழி திருநின்றவூர்
 3. M70E --> CMBT - வேப்பம்பட்டு, வழி திருநின்றவூர்
 4. 71E --> பிராட்வே - திருநின்றவூர்
 5. M71E --> அம்பத்தூர் தொழிற்பேட்டை - திருநின்றவூர்
 6. 154A --> தி. நகர் - திருநின்றவூர்
 7. 563 --> அம்பத்தூர் தொழிற்பேட்டை - பெரியபாளையம், வழி திருநின்றவூர்
 8. 571 --> பிராட்வே - திருவள்ளூர், வழி திருநின்றவூர்
 9. 572 --> அம்பத்தூர் தொழிற்பேட்டை - திருவள்ளூர், வழி திருநின்றவூர்
 10. 580 --> ஆவடி - ஆரணி, வழி திருநின்றவூர்
 11. 71P --> தி. நகர் - வேப்பம்பட்டு, வழி திருநின்றவூர்
 12. 71V --> பிராட்வே - வேப்பம்பட்டு, வழி திருநின்றவூர்
 13. T16 --> ஆவடி - திருவள்ளூர், வழி திருநின்றவூர்

தொடருந்து வசதி[தொகு]

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் வரை இயக்கப்படும் அனைத்து புறநகர் மின்சார தொடருந்துகளும் திருநின்றவூர் தொடருந்து நிலையத்தில் நிற்கும்.

பொழுதுபோக்கு[தொகு]

திருநின்றவூர் பேரூராட்சியில் இயங்கிவரும் இரண்டு திரைஅரங்குகள்

 1. காவேரி திரையரங்கம் - திருநின்றவூரில் இயங்கி வரும் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் எதிரில் உள்ளது இந்த திரையரங்கம்
 2. லக்ஷ்மி திரையரங்கம் - கிருஷ்ணபுரம் அருகில் உள்ளது இந்த திரையரங்கம்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநின்றவூர்&oldid=2574178" இருந்து மீள்விக்கப்பட்டது